Seine-Saint-Denis : மூன்று காவல்துறையினர் மீது தாக்குதல்!!

21 ஆடி 2025 திங்கள் 18:56 | பார்வைகள் : 697
காவல்துறையினர் மூவர் மீது அமோனியா ஸ்பிரே வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
L'Île-Saint-Denis (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் ஜூலை 20 ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. அங்கு குடியிருப்பு பகுதி ஒன்றில் இளைஞர்களிடையே மோதல் வெடித்ததாக தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வருகை தந்தபோது அவர்களை குறித்த இளைஞர்கள் தாக்க தொடங்கினர். குறிப்பாக அமோனியா திரவம் நிரப்பட்ட ஸ்பிரே அடித்து காவல்துறையினரை நிலைகுலையச் செய்தனர்.
மூன்று காவல்துறையினர் மீது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அவர்களில் ஒருவருக்கு முகத்தில் எரிவும், கண் எரிவும் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.