Paristamil Navigation Paristamil advert login

பஹல்காம் தாக்குதல் குறித்து பார்லி.,யில் விவாதிக்க பா.ஜ., சம்மதம்

பஹல்காம் தாக்குதல் குறித்து பார்லி.,யில் விவாதிக்க பா.ஜ., சம்மதம்

22 ஆடி 2025 செவ்வாய் 07:47 | பார்வைகள் : 138


பஹல்காம் தாக்குதல் குறித்து பார்லிமென்டில் விவாதிக்க மத்திய அரசு சம்மதித்தும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முரண்டு பிடித்து அமளியில் ஈடுபட்டதால், இரு சபைகளும் அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டு, நாள் முழுதும் சபை நடவடிக்கைகள் முடங்கின. பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கியது.

லோக் சபாவில் காலை 11:00 மணிக்கு அலுவல்கள் துவங்கியதும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆமதாபாத், 'ஏர் இந்தியா' விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முழக்கம் இது முடிந்ததும், சபையின் மையப் பகுதிக்கு உடனே விரைந்த காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கூச்சலிட துவங்கினர்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்பரேஷன் சிந்துார் தொடர்பாக முழக்கங்களை எழுப்பிய எம்.பி.,க்கள், 'எங்களுக்கு நீதி வேண்டும்' என்ற வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தியபடி அமளியில் ஈடுபட்டனர். அவர்களை எச்சரித்த சபாநாயகர் ஓம் பிர்லா, ''அனைத்து பிரச்னை களையும் விவாதிக்க அரசு தயார். சபை என்பது விவாதங்களுக்கானதே தவிர, கோஷங்களுக்கானது அல்ல.

விதிகளின்படி தான் சபையை நடத்த முடியும். ஆப்பரேஷன் சிந்துார் குறித்து, நிச்சயமாக அதற்கான நேரத்தில் விவாதிக்கலாம்,'' என்றார். இதை ஏற்காத எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட, லோக்சபா மதியம் 12:00 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின், லோக்சபா மீண்டும் கூடியதும், எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் கூச்சலும் துவங்கியது. 'பிரதமர் மோடி எங்கே? அவர் சபைக்கு வந்து பதில் தர வேண்டும்' என, அவர்கள் முழக்கமிட்டனர்.

பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங், ''ஆப்பரேஷன் சிந்துார் குறித்து முழு விவாதம் நடத்த அரசு தயார். சபை நடவடிக்கைகள் தொடர, எம்.பி.,க்கள் ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார்.

பா.ஜ.,வைச் சேர்ந்த பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசுகையில், ''அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், எதை பற்றி விவாதிக்கலாம் என்பதை அனைவரும் சேர்ந்து முடிவு செய்வோம்,'' என்றார்.

முரண்டு பிடித்த எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மதிய உணவு இடைவேளை வரை சபை ஒத்தி வைக்கப்பட்டது. உணவு இடைவேளைக்கு பின் லோக்சபா கூடியதும், காங்கிரசைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பேசுவதற்கு பல முறை அனுமதி கேட்டார்; ஆனால் தரப்படவில்லை. இதையடுத்து, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், சபை மாலை 4:00 வரை ஒத்தி வைக்கப்பட்டது.

சபையில் பேச அனுமதி மறுக்கப்படுவதாக, லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டினார். இதன் பின், மாலை 4:00 மணிக்கு சபை கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபடவே, சபை நாள் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டது.

சபையில் பேச அனுமதி மறுக்கப்படுவதாக, லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டினார். இதன் பின், மாலை 4:00 மணிக்கு சபை கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபடவே, சபை நாள் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டது.

ராஜ்யசபாவிலும் அமளி ராஜ்யசபாவில் அலுவல்கள் துவங்கியதும், ஜீரோ நேரத்தில் காங்., தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ''இந்தியா - பாக்., பிரச்னையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் எப்படி தலையிட முடியும்? இது, நம் நாட்டுக்கே அவமானம்.

''போரை நிறுத்தியதாக செல்லுமிடமெல்லாம் டிரம்ப் கூறி வருகிறார். இதை பற்றி மத்திய அரசு என்ன நினைக்கிறது? பஹல்காம் தாக்குதல், ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கை குறித்து, உண்மையை அரசு கூற வேண்டும்,'' என்றார்.

இதற்கு பதிலளித்த பா.ஜ., தேசிய தலைவரும், மத்திய சுகாதார அமைச்சரும், சபை முன்னவருமான நட்டா, ''அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன்,'' என்றார். இதை ஏற்காத எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், சபை ஒத்தி வைக்கப்பட்டது.

ராஜ்யசபா மீண்டும் கூடியதும், கேள்வி நேரம் துவங்கியது. அப்போது, தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேசியதாவது:

ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக, மேற்கத்திய நாடுகள் மற்றும் நம் நாட்டில் உள்ள சில ஊடகங்கள் இஷ்டம் போல எழுதுகின்றன. அவர்களுக்கே உரிய கற்பனையில், இந்த விபத்தை கட்டமைக்க பார்க்கின்றனர்.

கூச்சல், குழப்பம் இந்த விபத்தில் விசாரணை இன்னும் முடியவில்லை. இறுதி அறிக்கையில் தான், விபத்துக்கான உண்மையான காரணம் தெரிய வரும். அதற்குள் நாம் எந்த முடிவுக்கும் வந்து விடக்கூடாது.

கூச்சல், குழப்பம் இந்த விபத்தில் விசாரணை இன்னும் முடியவில்லை. இறுதி அறிக்கையில் தான், விபத்துக்கான உண்மையான காரணம் தெரிய வரும். அதற்குள் நாம் எந்த முடிவுக்கும் வந்து விடக்கூடாது.

விமானப் பயணங்களின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம். பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்த உயர்மட்டக் குழு ஆய்வு செய்து வருகிறது.

விமான விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவதை போல, விமானம் மோதிய இடத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கும் சம அளவில் நிவாரண நிதி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் அமளியால் கூச்சல், குழப்பம் அதிகரித்ததால், ராஜ்யசபாவும் நாள் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டது.

பஹல்காம் தாக்குதல், ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கை குறித்து பார்லிமென்டில் விவாதிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்தும், எதிர்க்கட்சிகள் முரண்டு பிடித்து தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு சபைகளும் அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டு, நாள் முழுதும் சபை நடவடிக்கைகள் முடங்கின.


போதையின் பிடியில் தமிழகம்

' ராஜ்யசபாவில் சரக்கு கப்பல் போக்குவரத்து ஆவணங்கள் தொடர்பான மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை பேசுகையில், ''போதைப் பொருட்களின் கூடாரமாக சென்னை மாறிவிட்டது. போதை கலாசாரத்துக்கு தி.மு.க., அரசு உடந்தையாக இருக்கிறது. ''வெளிநாடுகளில் இருந்து வரும் பெருமளவிலான போதைப் பொருட்கள் தமிழகத்தில் தான் இறக்குமதி ஆகின்றன. மேலும், தமிழகத்தில் போலீஸ் ஸ்டேஷன்களில், விசாரணைக்காக அழைத்து வரப்படுவோர் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. இவற்றுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,'' என்றார்.


நீதிபதி வர்மாவை நீக்க நோட்டீஸ்

பண மூட்டை விவகாரத்தில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நேற்று வழங்கப்பட்டது. 100 எம்.பி.,க்களின் கையொப்பம் தேவை என்ற நிலையில், 145 பேர் அந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டனர். இதே போல, துணை ஜனாதி பதியும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கரிடமும் பதவி நீக்க தீர்மானம் வழங்கப்பட்டது. இதில், 65 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டனர். இதை தொடர்ந்து, இரு சபைகளிலும் இந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படும். பின், நீதிபதி மீதான முறைகேடு குறித்து விசாரிக்க, ஒரு குழு அமைக்கப்படும். அக்குழு அளிக்கும் அறிக்கையின்படி, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய ஓட்டெடுப்பு நடத்தப்படும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்