சிறப்பு உயர் பாதுகாப்பு சிறைச்சாலை! - முதல்கட்டமாக 17 கைதிகள் அடைப்பு!!

22 ஆடி 2025 செவ்வாய் 12:00 | பார்வைகள் : 523
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு என சிறப்பு உயர் பாதுகாப்பு சிறைச்சாலை ஒன்றை பா-து-கலே மாவட்டத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. அதில் முதல்கட்டமாக 17 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
Vendin-le-Vieil எனும் இச்சிறைச்சாலை உயர் பாதுகாப்பு கொண்டதும், இங்கு சிறைவைக்கப்படும் கைதிகளுடன் வெளித்தொடர்பு மேற்கொள்ளமுடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக போதைப்பொருள் கடத்தல்காரர்களில் மிக முக்கியமானவர்களை மட்டுமே இங்கு சிறைவைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று ஜூலை 22, செவ்வாய்க்கிழமை முதற்கட்டமாக 17 கைதிகள் அங்கு இடமாற்றப்பட்டுள்ளனர். முன்னதாக ஜூலை 31 ஆம் திகதி அவர்கள் இடமாற்றப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பத்து நாட்களுக்கு முன்பாகவே அவர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர்.
நீதித்துறை அமைச்சர் Gérald Darmanin இதனை இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.