வேலையில்லாதோர் கொடுப்பனவில் சிக்கல்!!

22 ஆடி 2025 செவ்வாய் 13:00 | பார்வைகள் : 1266
புதிய வரவுசெலவுத்திட்டத்தில் €44 பில்லியன் யூரோக்கள் சேமிக்க அரசு திட்டமிட்டுள்ளமை அறிந்ததே. இதற்காக வேலையில்லாதோருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மட்டுப்படுத்தப்பட உள்ளது.
கேப்ரியல் அத்தால் பிரதமராக இருந்தபோது அறிவிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகளை தற்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி 18 மாதங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பவுகளை 15 மாதங்களாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு 2.5 பில்லியன் யூரோக்கள் சேமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, முதல் ஆறுமாத காலத்துக்கு பணிபுரிந்திருக்கவேண்டும் எனும் சட்டம் தற்போது 8 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.