வைரலாகும் தோனி அணிந்த பியானோ சட்டை - விலை இவ்வளவா?

22 ஆடி 2025 செவ்வாய் 13:38 | பார்வைகள் : 127
தோனி அணிந்த பியானோ சட்டை இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவராக இருந்த மஹேந்திர சிங் தோனி, வெற்றிகரமான அணித்தலைவர் என போற்றப்படுகிறார்.
கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஐசிசி வெள்ளை பந்து (White Ball) கோப்பைகளையும் வென்ற ஒரே அணித்தலைவர் தோனி மட்டுமே.
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் CSK அணிக்காக விளையாடி வருகிறார்.
ஒருகாலத்தில் தோனியின் ஓவ்வொரு ஹேர் ஸ்டைலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தது. அதேபோல், தற்போது தோனி அணிந்துள்ள சட்டை கவனம் பெற்றுள்ளது.
சமீபத்தில் அவர் அணிந்திருந்த பியானோ கீ போர்டு மற்றும் இசை குறிப்புகள் உள்ள டிசைன் சட்டை இணையத்தில் வைரலானது.
அந்த சட்டையின் விலை 865 டொலர் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.74,000 ஆகும்.
இந்த சட்டை பட்டுத்துணியால் ஆனதே அதன் சிறப்பம்சம் என கூறப்படுகிறது. இந்த சட்டை அமீரி (Amiri) என்ற பிராண்டின் தயாரிப்பு ஆகும்.