Paristamil Navigation Paristamil advert login

இலங்கை முழுவதும் தொடரும் சோதனை நடவடிக்கை – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

இலங்கை முழுவதும் தொடரும் சோதனை நடவடிக்கை – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

22 ஆடி 2025 செவ்வாய் 16:53 | பார்வைகள் : 226


போதைப்பொருள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்கான தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளில் இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படை மற்றும் முப்படைகள் இணைந்து நேற்றும் பல தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன.

பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப் படையினர் மற்றும் முப்படை உறுப்பினர்கள் உட்பட 73,000க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, 24,690 பேர் சோதனை செய்யப்பட்டதுடன், 9,717 வாகனங்கள் மற்றும் 7,637 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 1,427 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 461 கிராம் 866 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 401 கிராம் 416 மில்லி கிராம் ஹெரோயின் உள்ளிட்ட பெருந்தொகையான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கடந்த 20 நாட்களில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 02 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த விசேட சோதனைகளின் போது குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 30 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பல்வேறு குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 367 பேரும் கைதாகினர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்