Paristamil Navigation Paristamil advert login

திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் த்ரில்லர் மூவி!

திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் த்ரில்லர் மூவி!

22 ஆடி 2025 செவ்வாய் 17:30 | பார்வைகள் : 230


இயக்குநர் பி மணிவர்மன் இயக்கத்தில் தமன் குமார், மால்வி மல்ஹோத்ரா, காளி வெங்கட், தலைவாசல் விஜய், சந்தான பாரதி ஆகியோர் பலர் நடிப்பில் சூப்பர்நேச்சுரல் ஹாரர் த்ரில்லர் கதையை மையப்படுத்தி கடந்த 18ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் ஜென்ம நட்சத்திரம். சஞ்சய் மாணிக்கம் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அமோஹம் ஸ்டூடியோஸ் மற்றும் வைட்லேம்ப் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இனைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.

தமிழ் மொழியில் உருவாக்கபட்டு திரைக்கு வந்த இந்த படம் 4 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்னதாக எத்தனையோ ஹாரர் த்ரில்லர் படங்கள் வந்திருந்தாலும் வித்தியாசமான கதை மற்றும் காட்சிகளுடன் செண்டிமெண்ட் மற்றும் த்ரில்லர் இரண்டையும் ஒன்றாக கொடுத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் திளைக்க வைத்த படம் என்றால் அது ஜென்ம நட்சத்திரம் தான்.


தமிழில் வெளியான இந்தப் படத்தின் தெலுங்கு டப்பிங் பணிகள் இப்போது பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து அமோஹம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் வெப்சைட்டில் கூறியிருப்பதாவது: மகிழ்ச்சியான கொண்டாட்டங்களுடன் ஜென்ம நட்சத்திரம் படத்தின் தெலுங்கு டப்பிங் ஆரம்பித்துள்ளது என்பதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம். தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கும் இந்தப் படம் அதே ஆர்வத்தையூம், நம்பிக்கையையும் கொண்டு சேர்க்கும்.

டப்பிங் செயல்முறை மற்றும் படத்தின் வெற்றிக்கான ஆசீர்வாதங்களைத் தேடி, உற்சாகத்துடன் தெலுங்கு டப்பிங்கிற்கான பூஜை போடப்பட்டது. இந்தப் புதிய அத்தியாயத்தை நாம் தொடங்கும்போது, தெலுங்கு பார்வையாளர்களுடன் ஆழமாக எதிரொலிக்கும் ஒரு அனுபவத்தை வழங்குவதாகவும், மொழியின் கலாச்சார சாரத்தைத் தழுவி, எங்கள் கதையின் ஆன்மாவுக்கு உண்மையாக இருப்பதாகவும் உறுதியளிக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இந்தப் படத்தை பார்ப்பதற்கான 5 முக்கியமான காரணங்கள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

ஒரு புதுமுக இயக்குநரின் படைப்புத் திறன் எந்தளவிற்கு இருக்கிறது என்பதை இந்தப் படம் எடுத்துக்காட்டுக்கிறது. ஒரு இயக்குநராக தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமான செய்து வெற்றிகரமாக படத்தையும் முடித்து இன்று ரசிகர்களின் அன்பையும், ஆசிர்வாதத்தையும் பெற்றுள்ளார். எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் திரைக்கு வந்த படங்களில் இந்தப் படமும் ஒன்று. இன்றைய காலகட்டத்தில் புதுமுக இயக்குநர்களின் படங்கள் தான் ஹிட் படங்களாக அமைகின்றன.

சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகர் தமன் குமார் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக ஆச்சரியங்கள், சட்டம் ஒரு இருட்டறை, சும்மா நச்சுன்னு இருக்கு, சேது பூமி, 6 அத்தியாயம், அயோத்தி, ஒரு நொடி, பார்க் என்று பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜென்ம நட்சத்திரம் படத்தில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

தமன் குமாரின் சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறது. த்ரில்லர் கதையை தேர்வு செய்து நடித்து அதனை இப்போது ஹிட்டும் கொடுத்துள்ளார்.

ஹிந்தி டிவி சீரியல் மூலமாக நடிக்க வந்த மால்வி மல்ஹோத்ரா ஹோட்டல் மிலன் என்ற பாலிவுட் படம் மூலமாக ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். இந்த படத்திற்கு ஒரு சில ஹிந்தி படங்களிலும் ஓடிடி படங்களிலும் நடித்துள்ளார். ஹிந்தி மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் ஓரிரு படங்களில் நடித்துள்ள மால்வி இப்போது தமிழ் சினிமாவிலும் கால் பதித்துள்ளார். இது அவரது முதல் படம் என்றாலும் புதுமுக நடிகை போன்று இல்லாமல் இந்த படத்திற்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துள்ளார்.

பின்னணி பாடக்ரான சஞ்சய் மாணிக்கம் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இதற்கு முன்னதாக தமன் குமார் நடிப்பில் வெளியான ஒரு சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதுமட்டுமின்றி அவரது படங்களில் பாடவும் செய்திருக்கிறார். என்னதான் இளம் இசையமைப்பாளராக இருந்தாலும் இவரது பங்களிப்பு இந்த படத்தில் அதிகளவில் இருந்துள்ளது.

அரசியல்வாதியிடம் வேலை பார்க்கும் காளி வெங்கட்டின் மகளுக்கு அறுவை சிகிச்சைக்கு ரூ.40 லட்சம் தேவைப்படுகிறது. இதற்கு அரசியல்வாதியிடம் கேட்க அவமானம் ஏற்படுகிறது. இதனால் அரசியல்வாதி வைத்திருக்கும் கருப்பு பணத்தை எடுத்து மறைத்து வைக்கிறார். ஒரு கட்டத்தில் அவர்களால் கொலை செய்யப்படும் போது தான் மறைத்து வைத்திருக்கும் பணத்தை பற்றி ஹீரோவிடமும் நண்பர்களிடமும் சொல்கிறார். மேலும், தனது மகளை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார். அவர் மறைத்து வைத்திருக்கும் இடத்திற்கு சென்ற போது அங்கு அமானுயத்தால் பல அசம்பாவிதங்கள் நடக்கிறது. அதன் பிறகு அந்த பணத்தை எடுத்தார்களா காளி வெங்கட்டின் மகள் காப்பாற்றப்பட்டாரா என்பது தான் படத்தோட மீதிக் கதை.

ஜென்ம நட்சத்திரம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தப் படத்தின் Thanks Giving Meet சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றுள்ளது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்