Paristamil Navigation Paristamil advert login

‘அவதார் 3’ ரெடி... வெளியானது போஸ்டர்..

‘அவதார் 3’ ரெடி... வெளியானது போஸ்டர்..

22 ஆடி 2025 செவ்வாய் 18:30 | பார்வைகள் : 209


ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அவதார் 3’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது ‘அவதார்’. உலகம் முழுவதும் வியப்பை ஏற்படுத்திய இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருள்செலவில் உருவாக்கப்பட்டு, உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்கள் வசூலை அள்ளி வசூல் சாதனையை நிகழ்த்தியது.

இதையடுத்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் 52,000 திரைகளில் 2022 டிசம்பர் 16 ஆம் தேதி வெளியானது. இந்தப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.15,000 கோடி வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அவதார் படத்தின் 3-வது பாகமான ‘அவதார் ஃபயர் அன்ட் ஆஷ்’ ( நெருப்பும் சாம்பலும்) படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்பது குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படத்தின் டிரைலரை தி ஃபென்டாஸ்டிக் ஃபோர் படத்தின்போது பிரத்தியேகமாக திரையரங்குகளில் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தி ஃபென்டாஸ்டிக் ஃபோர் படம் வரும் ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் வில்லனான வராங் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப்படம் வரும் டிசம்பர் 19ஆம் நாள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்