ரஷியாவை குறிவைத்து புதிய ஐரோப்பிய தடைகளை தயாரிக்கும் பிரான்ஸ்!!

22 ஆடி 2025 செவ்வாய் 18:46 | பார்வைகள் : 602
உக்ரைனில் போரை நிறுத்த ரஷியாவுக்கு எதிராக புதிய ஐரோப்பிய தடைகளின் தொகுப்பை பிரான்ஸ் தயாரிக்கிறது என்று வெளிநாட்டு அமைச்சர் ஜான்-நோயல் பாரோ அறிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் ஐக்கிய அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும் என்றும், ரஷியாவின் போர் பொருளாதாரத்தை சோர்வடையச் செய்யும் வகையில் அமுல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஏற்கனவே 18வது தடைகள் தொகுப்பை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்படுத்திய நிலையில், இது மேலும் கடுமையான நடவடிக்கையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரத்தில், உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி, கீவ் மற்றும் மாஸ்கோ பிரதிநிதிகள் புதன்கிழமை துருக்கியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என அறிவித்துள்ளார். ஜான்-நோயல் பாரோ, உக்ரைன் கடந்த ஐந்து மாதமாக 30 நாள் நிபந்தனையற்ற போர்நிறைவை ஏற்கத் தயாராக இருக்கிறது, ஆனால் புதின் இதுவரை அதைக் ஏற்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் இந்தப் போரை "அநியாயமான, மனிதாபிமானமற்ற மற்றும் தந்திரமானது" என்றும் வர்ணித்துள்ளார்.