ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் கதிரியக்க மண்...?

23 ஆடி 2025 புதன் 05:53 | பார்வைகள் : 217
ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில், கதிரியக்க மண் பயன்படுத்தப்பட உள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் கடந்த 2011 ஆம் ஆண்டு 9 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால், புகுஷிமாவில் உள்ள ஒனகாவா அணுமின் நிலையம் பேரழிவை சந்தித்தது. இதன் காரணமாக, அணு உலையின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டது.
14 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் அணு உலை உள்ளே இருந்த கதிரியக்க எரிபொருள் உருகி, கழிவுகளுடன் கலந்து அணு உலை உள்ளே படிந்துள்ளது.
அணு உலை வளாகத்தை சுத்தம் செய்ய 40 ஆண்டுகள் ஆகும் எனவும், இதற்கு 11 பில்லியன் டொலர்கள் தேவைப்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், அணு உலைக்கு அருகே, கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஆனால் சற்று கதிரியக்கத் தன்மை கொண்ட 14 மில்லியன் கன மீட்டர் மண் உள்ளது.
இதனை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது தொடர்பாக மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியில் ஜப்பான் அரசாங்கம் தீவிரமாக உள்ளது.
அவ்வாறு மக்களின் நம்பிக்கையை பெரும் வகையில், டோக்கியோவில் உள்ள பிரதமர் ஷிகெரு இஷிபாவின் அலுவலக வளாகத்தில் தோட்ட புல்வெளியின் ஒரு பகுதிக்கு அடியில், புகுஷிமாவில் இருந்து 2 கன மீட்டர் மண் வைக்கப்பட உள்ளது என சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டோக்கியோவிலும் அதைச் சுற்றியுள்ள பல பொது பூங்காக்களிலும் உள்ள மலர் படுக்கைகளில். சிறிது மண்ணைப் பயன்படுத்தி பரிசோதனை செய்யும் திட்டத்தை முன்னதாக அறிவித்திருந்தது.