யுனெஸ்கோவில் இருந்து வெளியேறிய அமெரிக்கா! - கவலை வெளியிட்ட மக்ரோன்!!

22 ஆடி 2025 செவ்வாய் 19:48 | பார்வைகள் : 701
யுனெஸ்கோ (UNESCO) அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பை அடுத்து பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் தனது கவலையை வெளியிட்டார்.
கல்வி, விஞ்ஞானம், கலாச்சாரத்துக்கான ஐக்கியநாடுகள் சபையின் அமைப்பான UNESCO இற்கு எவ்வித நிதி உதவியும், ஆதரவும் அளிக்கப்போவதில்லை என ட்ரம்ப் அறிவித்தார். அதை அடுத்து யுனெஸ்கோவுக்கான தனது ஆதரவை மக்ரோன் பதிவு செய்தார்.
”அறிவியல், கடல், கல்வி, கலாச்சாரம் மற்றும் உலக பாரம்பரியத்தின் உலகளாவிய பாதுகாவலரான யுனெஸ்கோவிற்கு அசைக்க முடியாத ஆதரவு வழங்குகிறேன்," என மக்ரோன் குறிப்பிட்டார்.
யுனெஸ்கோ பிரிவினைவாதத்தை ஏற்படுத்துவதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளமை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.