Paristamil Navigation Paristamil advert login

கலாச்சார அமைச்சர் மீது ஊழல் வழக்கு! - அரசாங்கத்தில் தொடருவார்..!!

கலாச்சார அமைச்சர் மீது ஊழல் வழக்கு! - அரசாங்கத்தில் தொடருவார்..!!

22 ஆடி 2025 செவ்வாய் 20:48 | பார்வைகள் : 480


பிரான்சின் கலாச்சார அமைச்சர்  Rachida Dati மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், அவர் மக்ரோனின் அரசாங்கத்தில் தொடருந்து பணியாற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது.

”அமைச்சர் மீது நீதிமன்ற விசாரணைகள் தான் இடம்பெறு வருகிறது. அதானால் அவர் அரசாங்கத்தில் தனது பணியை தொடருவார்!” என ஜனாதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

அவர் தனது செல்வாக்கை தவறுதலாக பயன்படுத்தியுள்ளதாகவும், ஊழலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னதாக 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலும் அவர் மீது இதே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. 

அவர் தனது அரசியல் பிரச்சாரத்துக்காக 900,000 யூரோக்களை Renault-Nissan   நிறுவனங்களின் உரிமையாளர் Carlos Ghosn  இடம் இருந்து பெற்றுக்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்