வீட்டுவாடகை செலுத்தாவிட்டால் சம்பளத்தில் இருந்து நேரடி பிடிப்பு!

23 ஆடி 2025 புதன் 15:25 | பார்வைகள் : 6087
2025 ஜூலை 1 முதல், வீட்டு உரிமையாளர்கள் செலுத்தப்படாத வாடகைகளை, வாடகைதாரரின் சம்பளத்தில் இருந்து நேரடியாக பிடிக்க முடியும்.
இதற்காக, அவர்கள் ஒரு நீதிமன்ற தீர்ப்பை (titre exécutoire) பெற்றிருக்க வேண்டும். பின்னர், commissaire de justice மூலமாக "பணம் செலுத்த உத்தரவு" அனுப்பப்படுகிறது.
ஒரு மாதத்துக்குள் வாடகைதாரர் தொகையை செலுத்தவில்லையெனில், சம்பள பிடிப்பு செய்யப்படலாம். இப்போது, நீதிபதி அனுமதி இல்லாமலும், greffe-இன் பங்கு இல்லாமலும் இந்த நடைமுறையை செயல்படுத்த முடியும்.
பிடிப்பு செய்யப்பட்ட தொகைகள், commissaire de justice répartiteur என்பவரிடம் செலுத்தப்படும். இது வரை, பணம் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டியிருந்தது. புதிய முறையால், பணம் திரும்பப்பெறும் செயல் வேகமாகவும் நேரடியாகவும் நடைபெறுகிறது.
வாடகைதாரர் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு கூற 1 மாத அவகாசம் பெறுகிறார், ஆனால் 10,000 € மேல் இருப்பின், வழக்கில் வக்கீல் கட்டாயமாகும். பிடிக்கப்படும் தொகை barème (சில கணக்கீடுகளின் முடிவைக் கொடுக்கும் எண் அட்டவணைகளின் தொகுப்பு) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது, மேலும் ஒரு குறைந்தபட்ச தொகையை வாடகைதாரரிடம் விட வேண்டிய கட்டாயமும் உள்ளது (RSA – 646,52 €).
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1