ஜனாதிபதி குறித்து - உள்துறை அமைச்சரின் சர்ச்சைக் கருத்து!

23 ஆடி 2025 புதன் 16:03 | பார்வைகள் : 732
ஜனாதிபதி மக்ரோன் குறித்து உள்துறை அமைச்சர் Bruno Retaileau தெரிவித்த கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இம்மானுவல் மக்ரோன் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர், பிரான்ஸ் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்த நெருக்கடிகளை ’மக்ரோனிசம்’ என எதிர்கட்சிகள் வர்ணித்து வருகின்றன. இந்நிலையில், குறித்த மக்ரோனிசம் எனும் வார்த்தையை உள்துறை அமைச்சர் பயன்படுத்தி வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“2027 ஆம் ஆண்டுடன் மக்ரோனிசம் முடிந்துவிடும்” என அவர் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டார். சர்வதிகாரம் எனும் அர்த்தப்படும் விதமாக அந்த வார்த்தையை Bruno Retailleau பயன்படுத்தியுள்ளமை அக்கட்சிக்குள்ளேயே பெரும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளன.