Paristamil Navigation Paristamil advert login

அடுத்தடுத்து பலிக்கும் பாபா வங்காவின் அதிர்ச்சி கணிப்புகள்...!

அடுத்தடுத்து பலிக்கும் பாபா வங்காவின் அதிர்ச்சி கணிப்புகள்...!

23 ஆடி 2025 புதன் 17:19 | பார்வைகள் : 111


பாபா வங்காவின் கணிப்புகள் என்னவெல்லாம் அடுத்தடுத்து பலித்து வருகின்றன என்பதை பாப்போம்.

உலகின் பல தீர்க்கதரிசிகளில் ஒருவராக கருதப்படுபவர் பாபா வங்கா (Baba Vanga). இவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை.

பாபா வங்காவின் அடுத்தடுத்த பயங்கரமாக கணிப்புகள் பலரையும் நடுங்க வைக்கும் வகையில் உள்ளன.

அந்த வகையில் வேற்றுகிரகவாசிகளுடன் மக்களுக்கு தொடர்பு ஏற்படும் அல்லது வேறொரு உலகை சேர்ந்த மக்களை சந்திக்கும் சூழல் உருவாகும் என கண்டித்துள்ளார்.

அதன்படியே வேற்றுகிரகவாசிகள் மற்றும் விண்வெளிப் பயணத்தில் ஆர்வம் அதிகரித்து வருவதை நாம் காண முடிகிறது.

அதேபோல் சாதி போன்ற அமைப்புகள் முடிவுக்கு வரும் என்று பாபா வங்கா கணித்திருந்தார். இதனால் தோற்றம், நிறம், கலாச்சாரக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் மக்கள் வரும் ஆண்டுகளில் ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாபா வங்கா கணித்தது போலவே பயோபிரிண்டிங், மீளுருவாக்கம் ஆகிய மருத்துவ முன்னேற்றம், மனித உடலுக்கான செயற்கை உறுப்புகள் கொண்டு வரப்படும் என்ற கணிப்பை உண்மையாகியுள்ளன.

அத்துடன் 2026ஆம் ஆண்டுக்குள் செயற்கை உறுப்புகள் உற்பத்தி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

ஐரோப்பாவின் மக்கள்தொகை 2025ஆம் ஆண்டுக்குள் குறைத்துவிடும் என்று பாபா வங்கா கணித்திருந்தார்.

அதன்படியே ஐரோப்பிய கண்டத்தின் பிறப்பு விகிதம் வேகமாக குறைந்துள்ளது. இந்த கணிப்பு நிறைவேற அதிக வாய்ப்புள்ளதாக உள்ளாதாக பார்க்கப்படுவதால், வயதான மக்கள்தொகை குறித்து அங்குள்ள சமூகம் கவலை கொண்டுள்ளது.

இதேபோல் 2033ஆம் ஆண்டில் பாபா வங்கா கணித்தது கடல் மட்டத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்படும் என்பதுதான்.

இது பலிக்கும் வகையில் காலநிலை மாற்றம் மற்றும் பனிப்பாறை உருகுதல் ஆகியவை நடந்து வருகின்றன.

முன்னரே விஞ்ஞானிகள், நீர் மட்டத்தில் மெதுவான ஆனால் நிலையான உயர்வு குறித்து கவலை தெரிவித்தனர்.

முன்னதாக எதிர்காலத்தில் ஒரு கடுமையான பேரழிவு ஏற்படும், இதனால் சந்தைகள் சரிவுடன் தொடங்கும்.

மேலும், உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்படும்; அது வேலையின்மைக்கு வழிவகுக்கும். கடன், பணவீக்கம் மற்றும் நிலையற்ற பொருளாதார அமைப்புகள் பற்றிய உலகளாவிய கவலைகளை இந்த தீர்க்கதரிசனம் பிரதிபலிக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்