ஜப்பானுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்

23 ஆடி 2025 புதன் 18:19 | பார்வைகள் : 171
ஜப்பானுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்று செவ்வாய்க்கிழமை (22) எட்டப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
புதிய ஒப்பந்தத்தின் படி, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு முன்னர் விதித்திருந்த 25 சதவீத வரியை 15 சதவீதமாக அமெரிக்கா குறைந்துள்ளது.
எனது வழிகாட்டுதலின் கீழ் ஜப்பான் அமெரிக்காவில் 550 பில்லியன் டொலர்களை (€468.5 பில்லியன்) முதலீடு செய்யும் எனவும், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் கார் மற்றும் அரிசி உள்ளிட்ட குறிப்பிட்ட சில பொருட்களை ஜப்பானில் இனி விற்பனை செய்யலாம் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதோடு, இதுபோன்ற எதுவும் இதற்கு முன்பு நடந்ததில்லை என ட்ரம்ப் ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா "ஜப்பான் நாட்டுடன் எப்போதும் சிறந்த உறவைக் கொண்டிருக்கும்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.