வங்காளதேச விமான விபத்து! பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அச்சம்

23 ஆடி 2025 புதன் 18:19 | பார்வைகள் : 258
வங்காளதேச விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் வங்காளதேசத்தில் விமானப்படைக்கு சொந்தமான எப்.7 பி.ஜி.ஐ. விமானம் பயிற்சியில் ஈடுபட்டது.
புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த விமானம், உத்தாரா பகுதியில் பாடசாலை மீது விழுந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் விமானி மற்றும் மாணவர்கள் என 27 பேர் பலியாகினர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிகிச்சை பெற்று வரும் 165 பேரில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.