Paristamil Navigation Paristamil advert login

100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிதான சூரிய கிரகணம்

100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிதான சூரிய கிரகணம்

23 ஆடி 2025 புதன் 18:19 | பார்வைகள் : 118


2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் திகதி அன்று ஒரு அரிய சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இதனால் உலகின் சில நாடுகள் இருளில் மூழ்கும் என வானியலாய்வாளர்கள் கூறியுள்ளனர்.

 

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது நிகழும் ஒரு வானியல் நிகழ்வு தான் சூரிய கிரகணம். இந்த முழு சூரிய கிரகணமும் கிட்டத்தட்ட ஆறு நிமிடங்கள் வரை வானத்தையும் பூமியின் சில பகுதிகளையும் இருளாக்கும்.

 

 

இது போன்ற கிரகணம் 100 ஆண்டுகளுக்கு பிறகுதான் மீண்டும் நிகழும். இந்த அரிதான சூரிய கிரகணம், பல கண்டங்களில் தெரியும்.

 

இந்த அரிதான சூரிய கிரகணம், பல கண்டங்களில் தெரியும் எனவும் அதில் அட்லாண்டிக் பெருங்கடலில் தொடங்கி ஜிப்ரால்டர் ஜலசந்தி, தெற்கு ஸ்பெயின், வடக்கு மொராக்கோ, வடக்கு அல்ஜீரியா, வடக்கு துனிசியா,

 

வடகிழக்கு லிபியா, எகிப்து, சூடான், தென்மேற்கு சவுதி அரேபியா, ஏமன், சோமாலியா மற்றும் அரேபிய தீபகற்பத்திற்குள் உள்ள பிற நாடுகள் வழியாக பயணிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்