இரவில் கொட்டித்தீர்க்கும் மழை! - பரிஸ், புறநகரங்களுக்கு எச்சரிக்கை!!

23 ஆடி 2025 புதன் 18:39 | பார்வைகள் : 956
இன்று ஜூலை 23, புதன்கிழமை இரவு முதல் அடைமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது. பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிலமணிநேரங்களில் 40 தொடக்கம் 60 மில்லிமீற்றர் வரையான மழையும், சில இடங்களில் 80 மில்லிமீற்றர் வரைக்கும் மழை கொட்டித்தீக்க வாய்புள்ளது.
Paris,
Seine-Saint-Denis,
Val-de-Marne,
Yvelines,
Hauts-de-Seine,
Seine-et-Marne,
Essonne,
Val-d'Oise,
Loiret,
Eure-et-Loir,
Yonne,
Aisne,
Marne,
Aube
ஆகிய 14 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரவு 10 மணியில் இருந்து இந்த எச்சரிக்கை அதிகாலை 4 மணிவரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.