Paristamil Navigation Paristamil advert login

ரூ. 127 கோடி சொத்து: திரிணமுல் முன்னாள் எம்பி மகனிடம் பறிமுதல்

ரூ. 127 கோடி சொத்து: திரிணமுல் முன்னாள் எம்பி மகனிடம் பறிமுதல்

24 ஆடி 2025 வியாழன் 07:43 | பார்வைகள் : 174


பணமோசடி வழக்கில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.,யின் மகனும், தொழிலதிபருமான கரன் தீப் சிங்கின் ரூ.127 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பணமோசடி வழக்கில் கடந்த 2021ம் ஆண்டு கன்வர் தீப் சிங் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2024ல் அவர் மீது கூடுதல் புகாரும் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கன்வர் தீப் சிங்கின் மகன் கரண் தீப் சிங்கின் ரூ.127 கோடி மதிப்புள்ள பங்குகளை பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. அதாவது, பஞ்ச்குலாவில் உள்ள அல்கமிஸ்ட் மருத்துவமனையின் 40.94 சதவீத பங்குகளும், ஓஜாஸ் மருத்துவமனையின் 37.24 சதவீத பங்குகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஏற்கனவே, அல்கமிஸ்ட் நிறுவனத்தின் இயக்குநர்கள் மீது கோல்கட்டா போலீசார், சி.பி.ஐ., மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினர் பதிவு செய்த மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களிடம் இருந்து சட்டவிரோதமாக திரட்டப்பட்ட ரூ.1,848 கோடியை தவறாக தனது நிறுவனத்திற்கு பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நிலையில், கன்வர் தீப் சிங்கின் மகன் கரண் தீப் சிங்கிற்கு சொந்தமான இரு மருத்துவமனைகளின் ரூ.127 கோடி மதிப்பிலான பங்குகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

இதுவரையில் ரூ.238.42 கோடி மதிப்புள்ள சொத்துகள் ஐந்து தனி உத்தரவுகளின் படி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்