Paristamil Navigation Paristamil advert login

முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான்; அண்ணாமலை திட்டவட்டம்

முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான்; அண்ணாமலை திட்டவட்டம்

24 ஆடி 2025 வியாழன் 10:43 | பார்வைகள் : 260


தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே அறிவித்து விட்டார்; அதில், எந்த குழப்பமும் இல்லை,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவையில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், சிலபஸ் கேள்விகள் கேட்டால் மட்டுமே மாணவன் திறமையை பரிசோதித்து பார்க்க முடியும். சிலபஸ் இல்லாமல் தன்னிச்சையாக கேள்விகள் கேட்டிருப்பது தவறு.

சில மையங்களில் தேர்வு முடிந்த பின், வினாத்தாள்கள் பாதுகாக்கப்பட்ட விதம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 'சீல்' பிரிக்கப்பட்டு உள்ளது; முழுமையாக 'சீல்' வைக்கவில்லை. தேர்வு சரியாக நடைபெறவில்லை; வினாத்தாள்களை சரியாக பாதுகாக்கவில்லை.

கோவில் நிலங்கள் மீட்பு கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். ஒரு லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. தி.மு.க., மீது மக்கள் மன்றத்தில் கோபம் இருக்கிறது; மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்கிற எண்ணம் இருக்கிறது.

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி முழுமை பெற வேண்டும். தி.மு.க., கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேற வேண்டும். தேர்தலுக்கான சூடு இன்னும் ஆரம்பிக்கவில்லை. அத்தகைய சூடு வரும்போது, தேசிய ஜனநாயக கூட்டணி முழுமையான வடிவம் பெறும்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், தொழில்துறை வளர்ச்சியில் தமிழகத்துக்கும் மற்ற மாநிலங்களுக்கும் இடையேயான இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் இறப்பு விகிதம் அதிகமாகவும், பிறப்பு விகிதம் குறைந்தும் வருகிறது. இது, அபாயகரமான சூழ்நிலை. ஒருபுறம் வேலைக்கு ஆட்கள் குறைவாக இருக்கின்றனர். வடமாநிலங்களில் இருந்து வருவோர் வேலைகளில் அதிகமாக உள்ளனர்.

தமிழகத்தில் இறப்பு விகிதம் அதிகமாகவும், பிறப்பு விகிதம் குறைந்தும் வருகிறது. இது, அபாயகரமான சூழ்நிலை. ஒருபுறம் வேலைக்கு ஆட்கள் குறைவாக இருக்கின்றனர். வடமாநிலங்களில் இருந்து வருவோர் வேலைகளில் அதிகமாக உள்ளனர்.எதிர்காலத்தில் வேலை இருக்கும்; ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்கிற சூழல் ஏற்படும். மாநிலம் வளர, வளர இதுபோன்ற பிரச்னைகள் வரும். நமது நாட்டின் பொருளாதாரம் இன்னும் 10 ஆண்டுகளில் மாற ஆரம்பிக்கும்; அதற்கு தயாராக வேண்டும்.

முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே அறிவித்து விட்டார்; அதில், எந்த குழப்பமும் இல்லை. எதிர்க்கட்சியினர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் நுாறு நாள் வேலை திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பது உண்மை. ஈரோடு மாவட்டத்தில் இரண்டு ஊராட்சிகளில் முறைகேடு நடந்திருப்பதை ஆவணப்படுத்தி, மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம்.

இவ்வாறு, அண்ணாமலை கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்