Paristamil Navigation Paristamil advert login

கம்போடியா மற்றும் தாய்லாந்து ராணுவம் இடையே மோதல் - இருவர் பலி

கம்போடியா மற்றும் தாய்லாந்து ராணுவம் இடையே மோதல் - இருவர்  பலி

24 ஆடி 2025 வியாழன் 10:04 | பார்வைகள் : 336


கம்போடியா மற்றும் தாய்லாந்து ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், போர் விமானத்தை தாய்லாந்து எல்லையில் நிறுத்தியுள்ளது.

தென் கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா மற்றும் தாய்லாந்து ராணுவ துருப்புகள், எல்லை பகுதியில் இன்று காலை முதல் மோதலில் ஈடுபட்டுள்ளன.

வடமேற்கு கம்போடியாவின் ஒட்டார் மீஞ்சே மாகாணத்தில் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய தா மோன் தாம் கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் கம்போடிய துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தாய்லாந்து ராணுவம் தெரிவித்துள்ளது.

 

முன்னதாக கண்காணிப்பு ட்ரோனை நிறுத்தியதாகவும், அதைத்தொடர்ந்து பீரங்கிகள் மற்றும் நீண்ட தூர BM21 ராக்கெட்டுகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது.

 

 

மேலும், இதில் குறைந்தது 2 தாய்லாந்து ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், 2 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

எல்லையில் உள்ள 86 கிராமங்களைச் சேர்ந்த 40,000 தாய்லாந்து பொதுமக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

தாய்லாந்து ராணுவம் தான் முதலில் எல்லையில் தாக்குதலை தொடங்கியதாகவும், கம்போடியா ராணுவம் அதற்கு பதிலடி கொடுத்தாகவும் கம்போடிய முன்னாள் பிரதமர் ஹுன் சென் தெரிவித்துள்ளார்.

 

எல்லையில் மோதல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், கம்போடியாவில் உள்ள தாய்லாந்து நாட்டினர் "அவசர காரணம் இல்லாவிட்டால், சீக்கிரம் வெளியேறுமாறு, கம்போடிய தலைநகர் புனோம் பென்னில் உள்ள தாய் தூதரகம்வலியுறுத்தியுள்ளது.

 

தூதரகத்தின் அறிவிப்பை தொடர்ந்து, கம்போடியப் படைகளுக்கு எதிரான போர் நடவடிக்கைக்காக F-16 ஜெட் போர் விமானத்தை எல்லையில் நிறுத்தியுள்ளதாக தாய்லாந்து இராணுவம் தெரிவித்துள்ளது.

நேற்று தாய்லாந்து ராணுவ வீரர் கண்ணிவெடி வெடிப்பில் காயமடைந்து வலது காலை இழந்ததைத் தொடர்ந்து இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு கம்போடியாதான் காரணம் என்று தாய்லாந்து அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, தாய்லாந்து தனது தூதரை திரும்ப பெறுவதாக அறிவித்தது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்