டெஸ்ட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனை படைத்த ரிஷப் பண்ட்

24 ஆடி 2025 வியாழன் 12:04 | பார்வைகள் : 436
டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி, நேற்று மான்செஸ்டரில் தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 264 ஓட்டங்கள் குவித்தது.
இதில், கேஎல் ராகுல் 46 ஓட்டங்களும், ஜெய்ஸ்வால் 58 ஓட்டங்களும், சுப்மன் கில் 12 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மற்றும் சாய் சுதர்ஷன் இணைந்து நிதானமாக ஆடினர்.
இதில், 19 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை ரிஷப் பண்ட் படைத்தார்.
இங்கிலாந்தில், 1000 ஓட்டங்கள் எடுத்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.
இங்கிலாந்தில், 13 போட்டிகளில் விளையாடியுள்ள பண்ட், இந்த சாதனையை படைத்துள்ளார்.
தொடர்ந்து, 37 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்ற ரிஷப் பண்ட், அதனை காலில் வாங்கி, வலியால் துடித்தார்.
பிசியோதெரபிஸ்ட் உடனடியாக களத்திற்கு வந்து பண்டின் ஷூவை கழற்றி பார்த்த போது, காலில் ரத்தம் வழிந்ததோடு, சுண்டு விரலில் வீக்கம் இருந்தது.
இதையடுத்து ரிட்டயர்டு ஹர்ட் முறையில் அவர் களத்தில் இருந்து வெளியேறினார்.
அவரால் நடக்க முடியாத காரணத்தால் வாகனம் மூலம் பெவிலியன் திரும்பினார்.
பண்டை ஸ்கேன் பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளதாகவும், இந்திய அணியின் மருத்துவர் குழு கண்காணித்து வருவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
லார்ட்ஸில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் கை விரலில் காயமடைந்த பந்த், இப்போது காலில் காயமடைந்துள்ளார்.