50 பேருடன் பயணித்த ரஷ்ய பயணிகள் விமானம்.... யாரும் உயிர் பிழைக்கவில்லை..

24 ஆடி 2025 வியாழன் 14:04 | பார்வைகள் : 515
ரஷ்ய பயணிகள் விமானம் நாட்டின் கிழக்குப் பகுதியில் விபத்துக்குள்ளானது.
முதற்கட்ட தரவுகளின்படி 50 பேருடன் ரஷ்ய பயணிகள் விமானம் பயணித்துள்ளது, யாரும் உயிர் பிழைக்கவில்லை என்றும் அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
சைபீரியாவை தளமாகக் கொண்ட அங்காரா விமான நிறுவனத்தால் இயக்கப்படும் An-24 விமானம், சீனாவின் எல்லையை ஒட்டியுள்ள அமுர் பிராந்தியத்தில் உள்ள டின்டா என்ற நகரத்தை நெருங்கும் போது ரேடார் திரைகளில் இருந்து தவறி விழுந்ததாக அந்நாட்டு அவசரகால அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் துாரக்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமுர் மாகாணத்தில், அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.என்.24 ரக விமானம் சென்று கொண்டு இருந்தது.
இந்த விமானத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 40 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் பயணித்துள்ளனர், டிண்டா விமான நிலையம் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.
விமானம் விபத்துக்குள்ளானதா என்ற சந்தேகத்தில் மீட்பு படையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானத்தில் இருந்த 46 பேர் நிலைமை மற்றும் சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.