சீனாவில் 1,000 தொன் தங்க புதையல் - மிரளும் உலக நாடுகள்

24 ஆடி 2025 வியாழன் 14:04 | பார்வைகள் : 128
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் மிகப்பெரிய தங்க சுரங்கம் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக சமீபகாலமாக வெளியான தகவல்கள் இப்போது சீனா உறுதி செய்துள்ளது.
அதன்படி சீனாவின் ஹுனான் மாகாணத்தில் 1,000 தொன் எடை கொண்ட தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தங்கம் என்பது டிஜிட்டல் மொடலிங் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பூமிக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹுனானில் ஏற்கனவே இருக்கும் வாங்க் தங்க சுரங்கத்திற்கு அருகே இது அமைந்துள்ளது.
இந்த தங்க புதையலின் மொத்த மதிப்பு 83 பில்லியன் அமெரிக்க டொலர் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இது உலகின் மிகப்பெரிய தங்க சுரங்கமாகவும் பார்க்கப்படுகிறது.
தென்னாபிரிக்காவின் தெற்கு சுரங்கத்தில் 930 தொன் தங்கம் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் இது அதனை விட பெரியது என்பதை சீனா உறுதி செய்துள்ளது.
சீனா ஏற்கனவே உலகின் முன்னணி தங்கம் உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. இப்படியான சூழலில் இந்த தங்க சுரங்கம் அந்த நாட்டுக்கு ஜாக் பாட்டாக அமைந்துள்ளது.
முதற்கட்ட ஆய்வின்படி ஒரு டன் தாதுவில் 138 கிராம் வரை தங்கம் கிடைக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சீனாவின் இந்த தங்க புதையல் குறித்து பல நாடுகள் ஆச்சரியாக பார்க்கும் நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் சந்தேக கண்ணோடு பார்க்கின்றன.
ஒரே இடத்தில் 1,000 தொன் தங்கம் கிடைப்பது சாத்தியமில்லை. சீனா இந்த விஷயத்தில் பொய் சொல்லலாம் என்று அமெரிக்கா தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.