1983 ஜூலை கலவரத்தை நேரில் பார்த்தவரின் மனதை கலங்கவைக்கும் நாட்குறிப்பு

24 ஆடி 2025 வியாழன் 15:04 | பார்வைகள் : 136
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதி ஐந்தரை மணி - இரத்மலானை விமானப்படையின் அகதிமுகாமில் இருந்தபோது நான் நாற்குறிப்பொன்றை எழுத தீர்மானித்தேன்.
திங்கட்கிழமை 25ஆம் திகதி அதிகாலை முதல் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள எதிர்பாராத வன்முறை காரணமாக வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அதிர்ச்சியிலும் விரக்தியிலும் சிக்குண்டிருப்பதை பார்த்த பின்னரே நான் நடந்த சம்பவங்களை நாற்குறிப்பில் பதிவு செய்ய தீர்மானித்தேன்.
பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்திருந்தனர் பலர் சிங்கள காட்டுமிராண்டிகளால் கொல்லப்பட்டனர். ஈவிரக்கமற்ற சிங்களவர்களிடம் பல இளம் பெண்கள் தங்களை இழந்திருந்தனர்.
சிங்கள பௌத்தர்கள் என தங்களை அழைத்துக்கொள்ளும் மக்கள் செய்யும் அட்டூழியங்களை நாகரிக உலகிற்கு என்றோ ஒருநாள் நானோ அல்லது வேறு யாரோ கொண்டுசெல்ல முடியும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இந்த நாட்குறிப்பை நான் ஆரம்பிக்கின்றேன்.
நான் திங்கட்கிழமை அதிகாலை முதல் இந்த அகதிமுகாமில் இருக்கின்றேன்.
அதன் பின்னர் இந்த முகாமில் இடம்பெற்ற விடயங்கள் குறித்தும் இரத்மலானை விமான நிலையத்தில் தஞ்சமடைவதற்கு முன்னர் எனது தனிப்பட்ட அனுபவங்கள் குறித்தும் நான் தெரிவிக்கப்போகின்றேன்.
இந்த முகாமில் உள்ள ஏனைய அகதிகளுடன் கதைத்து அவர்களின் அனுபவங்களை நான் பகிர்ந்துகொள்ளப்போகின்றேன்.
இதன் மூலம் உலகம் உண்மையான கதையை அறிந்துகொள்ளும்.
1983 ஜூலை 25 திங்கட்கிழமை 6.30
மஹரகமவில் உள்ள எனது வீட்டிலிருந்து நான் எனது அலுவலகத்திற்கு சென்றேன். பிரதான வீதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு நான் சென்றவேளை பலர் வீதியில் குழுமியிருந்ததை அவதானித்தேன். அந்த வீதியின் இருமருங்கிலும் இருந்த வீதிகள் எரிந்துகொண்டிருந்தன.
நான் நின்றிருந்த இடத்திலிருந்து சிறிது தொலைவில் சுமார் 30 பேர் நபர் ஒருவரை தாக்கிக்கொண்டிருந்தனர்.
இவை ஓர் இனப்படுகொலையின் ஆரம்ப தருணங்கள் என நான் அப்போது எண்ணிப் பார்க்கவில்லை.
அந்த வன்முறையில் ஈடுபடாமலிருந்த ஒருவரை அழைத்து என்ன நடக்கின்றது என நான் கேட்டேன். அவரின் பதில் என்னை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. "அவர்கள் எங்களில் 13 பேரை யாழ்ப்பாணத்தில் கொலை செய்துவிட்டார்கள். அவர்களின் மரணத்திற்கு நாங்கள் பழிவாங்கவேண்டும்இ அனைத்து தமிழர்களையும் நாங்கள் கொல்லவேண்டும்இ அதனையே நாங்கள் செய்கின்றோம்" என அவர் தெரிவித்தார்.
நானும் ஒரு தமிழன் என தெரிந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்து பார்த்த நான் உடனடியாக அங்கிருந்து சென்றேன்.
அந்த மனிதனின் வார்த்தைகள் எனது நினைவை கிளறின. வடக்கில் மூன்று யுவதிகளை படையினர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியமைக்காக யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதியில் தமிழ் கொரில்லா குழுவொன்று இராணுவத்தினர் மீது தாக்குதலை மேற்கொண்டு 13 பேரை கொலை செய்துள்ளது என ஞாயிற்றுக்கிழமை மாலை நான் கேள்விப்பட்டேன்.
ஆனால் அந்த தருணத்தில் கூட நான் இது பெரும் கலவரமொன்றின் ஆரம்பம் என நான் கருதவில்லை. அலுவலகத்துக்கு செல்ல தீர்மானித்தேன்.
பேருந்து கிடைப்பது மிகவும் கஸ்டமான விடயமாக காணப்பட்டது. கஸ்டப்பட்டு பேருந்தில் ஏறினேன். வீதிகளில் மக்கள் பெருமளவில் நின்றதால் பேருந்து மெதுவாகவே சென்றது.
வீதியின் இரு மருங்கிலும் கடைகள் எரிவதை நான் பார்த்தேன். மக்கள் அலறிக்கொண்டிருந்தார்கள். நுகேகொட சந்தியை நெருங்கியதும் பஸ் நகர முடியாமல் நின்றுவிட்டது.
காடையர்கள் பேருந்துகளை நிறுத்தி அதில் யார் பயணிக்கின்றார்கள் என கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கைகளில் கத்திகளும் கோடாரியும் இருந்ததை பார்த்தேன் (அவர்களிடம் பெருமளவு ஆயுதங்கள் இருந்ததை அவதானிக்க முடிந்தது).
பேருந்தின் ஜன்னலுக்கு வெளியே தலையை விட்டு பார்த்தவேளை ஒருவன் இளைஞன் ஒருவனை தாக்குவதற்கு கோடாரியை உயர்த்தியதை பார்த்தேன். நான் அதிர்ந்து போய் வேறு பக்கம் தலையை திருப்பிக்கொண்டேன். அந்த இளைஞனுக்கு எதுவும் நடக்கக்கூடாது என நான் ஆண்டவனிடம் மன்றாடினேன்.
மற்றைய பக்கத்தில் இரண்டு கார்களை அடித்து நொருக்கிக்கொண்டிருந்தார்கள். டொயோட்டோ ரக வான் ஒன்று தீப்பிடித்ததை பார்க்க முடிந்தது.
திடீரென இரத்தத்தை உறைய வைக்கும் அலறல் சத்தமொன்று கேட்டது. அந்த வானிற்குள் ஆட்கள் இருக்கின்றார்கள் என நான் உணர்ந்தேன்.
அந்த பயங்கரமான காட்சியை பார்க்க முடியாமல் நான் தலையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டேன்.
அதற்கு சிறிது நேரத்தின் பின்னர் காடையர்கள் எங்கள் பேருந்தை நோக்கி ஓடிவந்தார்கள். பேருந்தில் யாராவது தமிழர்கள் இருக்கின்றார்களா என ஒருவன் நடத்துநரிடம் கேட்டான். நடத்துநர் மிகவும் மகிழ்ச்சியுடன் எனக்கு முன்னால் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த பெண்ணை காட்டினார்.
அவர்கள் தன்னை நோக்கி வருவதை பார்த்த அவர் தனது குங்குமத்தை அவசர அவசரமாக அழித்தார். ஒரு பெரிய தாடிவைத்த காடையன் ஒருவன் உடைந்த போத்தலை எடுத்து வயிற்றில் குத்தினான். அந்த பெண் கதற ஆரம்பித்தார். பேருந்தில் பெரும் குழப்பம் உருவானது.....
பேருந்தில் இருந்தவர்கள் இறங்க தொடங்கினார்கள். நான் இறங்குவதறகு முன்னர் அவசரஅவசரமாக என்ன நடக்கின்றது என பார்த்தேன்இஅவர்கள் சிறிய ஜன்னல் ஊடாக அந்த பெண்ணை இழுத்துக்கொண்டிருந்தார்கள்.
நான் பேருந்திலிருந்து இறங்கிஅங்கு நடப்பவற்றை பார்த்து சந்தோசப்பட்டுக்கொண்டிருந்த சிங்களவர்களுடன் சேர்ந்துகொண்டேன். அந்த பெண்ணிண் உடல் முழுவதும் இரத்தம்இஒருவர் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீமூட்டினார்.ஏனையவர்கள் கைதட்டி நடனமாடினார்கள்.
நான் அதனை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டுநின்றேன். எனது உடல் நடுங்கியது.
எனது வாழ்நாள் முழுவதும் நான் மரணித்தவர்களின் உடல்கள் தீ மூட்டப்படுவதையே பார்த்திருக்கின்றேன்இ உயிருடன்உள்ள ஒருவர் தீமூட்டப்படுவதை நான் பார்த்ததில்லை.
காடையர்கள் கைகளில் சிக்கிய தமிழ் சகோதரிகள்; காடையர்களுக்கு உத்தரவு பிறப்பித்த இராணுவம்
வீதியின் மறுபக்கத்திலிருந்து பௌத்த மதகுருமார் பேரணியாக அந்த சந்தியை நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
அவர்கள் கைககளை அசைத்து சத்தமிட்டனர்அவர்களில் ஒருவர் அனைத்து தமிழர்களையும் கொலை செய்யவேண்டும் ஒருவரை கூட தப்பவிடக்கூடாது என காடையர்களை நோக்கி கூச்சலிட்டார்.
நான் கடும் அச்சத்தின் பிடியில் சிக்குண்டேன்-சில நிமிடம் சிந்தித்த பின்னர் விரைவில் வீட்டுக்கு செல்வதே சிறந்த விடயம் என தீர்மானித்தேன்.
பேருந்து மூலம் பயணிப்பது மிகவும் ஆபத்தான விடயம் என்பதால் நான் நடந்தே வீட்டிற்கு செல்ல தீர்மானித்தேன்.
9.30 -நுகேகொட சந்தியிலிருந்து நான்கு கிலோமீற்றர் தொலைவிலிருந்த எனது வீட்டை நோக்கி நான் நடக்கதொடங்கினேன்- வீதியின் இரு மருங்கிலும் இருந்த கடைகளை மக்கள் சூறையாடிக்கொண்டிருந்தார்கள்.கடைகளை முழுமையாக கொள்ளையடித்த பிறகு அவற்றை தீயிட்டு கொழுத்தினார்கள்.
தொலைவில் இராணுவத்தினரின் ஜீப்பினை பார்த்தேன்.ஒருவித நிம்மதியுடன் நான் அதனை நோக்கி நடந்தேன்இ ஆனால் எனக்கு அதிர்ச்சி காத்திருந்ததுஇஜீப்பின் மேற்பகுதியில் ஆறு ஏழு இராணுவத்தினர் அமர்ந்திருந்தார்கள் அவர்கள் காடையர் கும்பல் சூறையாடுவதற்கான கொள்ளையடிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கிக்கொண்டிருந்தார்கள்இநான் திகைத்துப்போனேன்.
10.45- நான் மஹரகமவில் உள்ள எனது வீட்டை சென்றடைந்தேன்.அங்கு இன்னமும் எதுவும் நடக்கவில்லை.நான் வீட்டிற்குள் சென்றதும் பிரார்த்தனையில் ஈடுபட்டேன்.அதன் பின்னர் மண்வெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்புறம் சென்று நிலத்தை ஆழமாக தோன்றி அதற்குள் பெறுமதியான பொருட்களை துணி பொலித்தீனால் மூடி புதைத்தேன்.
11.30- எனது வீட்டிற்கு வெளியே பெரும் சத்தங்கள் கேட்டனஇகூச்சல் குழப்பமான நிலை காணப்பட்டது.ஜன்னலால் எட்டிப்பார்த்தேன்.
அரசாங்கத்திற்கு சொந்தமான பல ஜீப்கள்இஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பல பேருந்துகள் திடீரென அந்த பகுதிக்கு வந்தன.
அந்த பேருந்துகள் ஜீப்புகளில் இருந்து பலர் கத்திகள் வாள்களுடன் இறங்கினார்கள்.சுமார் 200 பேர் இருப்பார்கள் அவர்கள் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட விதத்தில் தமிழ் மக்களின் வீடுகளை நோக்கி ஒடினார்கள்.
அவர்களின் தலைவர்கள் போன்று தோற்றமளித்த ஒரு பத்துபேரின் கரங்களில் பேப்பர் போன்ற ஆவணங்கள் காணப்பட்டனஇ( அவை தேர்தல் வாக்காளர் பதிவேடுகள் என பின்னர்தான் தெரியவந்தது)அவர்கள் தமிழர்களின் வீடுகளை நோக்கி காடையர்களை வழிநடத்திக்கொண்டிருந்தார்கள்.
அவர்கள் இருவரை என்னால் அடையாளம் காணமுடிந்ததுஇஆளும் கட்சியின் தேர்தல் கூட்டங்களில் நான் அவர்களை சமீபத்தில் பார்த்திருக்கின்றேன்( ஐக்கிய தேசிய கட்சி)
எனது வீட்டிற்கு நேரே தமிழர்களின் வீடுகள் இருந்தனஇகாடையர்கள் ஜன்னல்களை உடைத்து பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள்.அந்த வீடுகள் தீப்பிடித்தனஇதீ வானளவிற்கு உயர்ந்தது.உள்ளேயிருந்தவர்கள் அலறினார்கள்.
11.45- நான் ஜன்னலை மூடிவிட்டு உள்ளே சென்றேன் - மெழுகுதிரியை கொழுத்தி அந்தோனியரை வணங்கினேன் தமிழர்களை பாதுகாக்குமாறு மன்றாடினேன்.
12.25 நான் வானொலியில் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் செய்தியை செவிமடுக்க ஆரம்பித்தேன்.பாதுகாப்பு அமைச்சின் ஊரடங்கு உத்தரவு குறித்து அறிவிப்பு வெளியானது.
1.30 மணி நான் தொடர்ந்தும் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவேளை வெளியே பெரும் அலறல்கள் சத்தங்கள் கேட்டன.
பலர் இரண்டு யுவதிகளை கூந்தலில் பிடித்து இழுத்து வந்துகொண்டிருந்தனர். எனது வீட்டிலிருந்து சற்று தொலைவில் வசித்தவர்கள் என நான் அடையாளம் கண்டுகொண்டேன்.'
மூத்த சகோதரிக்கு 18 வயதிருக்கும் இளைய சகோதரிக்கு 11 வயதிருக்கும். அவர்களை எனது வீட்டிற்கு அருகில் கொண்டுவந்தார்கள்இகாடையர்கள் கும்பல் அவர்களை சூழ்ந்துகொண்டது.அவர்களை என்ன செய்யலாம் என அவர்கள் விவாதித்தார்கள்.
திடீரென ஒருவன் அந்த சிறுமியை தனது கையில்பிடித்து இழுத்து தனது கையிலிருந்த கத்தியால் வெட்ட தொடங்கினான்.நான் மிகுந்த அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
மூத்த சகோதரி அச்சத்தினால் பேச்சு இழந்து ஒரு சிலையை போல காணப்பட்டாள்.
அதன் பின்னர் அவள் அந்த காடையர்களின் பைத்தியக்காரத்தனமான சிரிப்பிற்கு மத்தியில் அவர்களின் காலில் விழுந்து தனது சகோதரியை எதுவும் செய்யவேண்டாம் என மன்றாடினாள்.
பின்னர் அங்கிருந்த ஒருவன் கோடாரியை எடுத்து சிறுமியின் தலைiயை கொத்தினான்.மூத்தவள் திகைத்துபோய் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளுடைய தங்கை கொல்லப்பட்ட கொடுரமாக கொல்லப்பட்டவேளை அவள் அனுபவித்த அளவிடமுடியாத அச்சம் பயங்கரம் ஆகியவற்றின் கலவையான உணர்வுகள் உதவியற்ற அமைதியற்ற தன்மையின் தெளிவற்ற உணர்வுகளாக மாற்றம்பெற்றன
ஒரே நாளில் இருவர் உயிருடன் எரிக்கப்பட்டதை பார்த்தேன்-
மூத்த சகோதரிக்கு 18 வயதிருக்கும் இளைய சகோதரிக்கு 11 வயதிருக்கும். அவர்களை எனது வீட்டிற்கு அருகில் கொண்டுவந்தார்கள்இகாடையர்கள் கும்பல் அவர்களை சூழ்ந்துகொண்டது.அவர்களை என்ன செய்யலாம் என அவர்கள் விவாதித்தார்கள்.
திடீரென ஒருவன் அந்த சிறுமியை தனது கையில்பிடித்து இழுத்து தனது கையிலிருந்த கத்தியால் வெட்ட தொடங்கினான்.நான் மிகுந்த அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
மூத்த சகோதரி அச்சத்தினால் பேச்சு இழந்து ஒரு சிலையை போல காணப்பட்டாள்.
அதன் பின்னர் அவள் அந்த காடையர்களின் பைத்தியக்காரத்தனமான சிரிப்பிற்கு மத்தியில் அவர்களின் காலில் விழுந்து தனது சகோதரியை எதுவும் செய்யவேண்டாம் என மன்றாடினாள்.
பின்னர் அங்கிருந்த ஒருவன் கோடாரியை எடுத்து சிறுமியின் தலைiயை கொத்தினான்.மூத்தவள் திகைத்துபோய் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளுடைய தங்கை கொல்லப்பட்ட கொடுரமாக கொல்லப்பட்டவேளை அவள் அனுபவித்த அளவிடமுடியாத அச்சம் பயங்கரம் ஆகியவற்றின் கலவையான உணர்வுகள் உதவியற்ற அமைதியற்ற தன்மையின் தெளிவற்ற உணர்வுகளாக மாற்றம்பெற்றன
அவர்கள் தனது ஆடைகளை பலவந்தமாக அகற்றியவேளையிலும் அவள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
தனக்கு ஏற்படுத்தப்பட்ட வலிகள் தன்னை பாதிக்காத நிலைக்கு அவள் தள்ளப்பட்டிருந்தாள்.
தன்மீது சுமத்தப்பட்ட ஈடு செய்ய முடியாத அவமானம் குறித்து அவள்வெட்கப்படவில்லை.
ஏறைக்குறைய 20 ஆண்கள் அவளை பாலியல்வன்முறைக்கு உட்படுத்திய பின்னரே ஒருவன் ஏனையவர்களை எச்சரித்தான் . அவளை மூர்க்கத்தனமாக உலுப்பினான்.
அவள் கத்தவும் போராடவும் தொடங்கினாள்சுற்றிலும் பார்த்த அவள் தனது உடலில் இருந்து குருதி வெளியேறிக்கொண்டிருப்பதை முதல்தடவையாக உணர்ந்தாள்.
நான் உதவியில்லாத பார்வையாளனாக தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அவள் திடீரேன தனது முஷ்டிகளை இறுக்கிக்கொண்டாள்பின்னர் அவளது முகத்த்தில் உதவியற்ற சரணடைதல் தென்பற்றது.அவள் வானத்தை அண்ணாந்து பார்த்து தனக்குள் முணுமுணுக்க ஆரம்பித்தாள்.
ஆண்டவரே அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது அவர்களிற்கு தெரியாததால் அவர்களை மன்னியுங்கள்
அவள் ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு மயக்கத்திலாழ்ந்தாள்.அவர்கள் பின்னர் அவள்மீது பெட்ரோலை ஊற்றி எரித்தனர்.
உயிருடன் ஒருவர் எரிக்கப்படுவதை இரண்டாவது தடவையாக நான் அன்றைய தினம் பார்த்தேன்.
நாங்கள் மத்திய காலத்திற்குள் நுழைந்துவி;ட்டோமோ என நான் சிந்தித்தேன்.
இன்றைய காலத்து சிங்கள பௌத்தர்களை விட வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் - காட்டுமிராண்டிகள் மிகவும் நாகரீகமானவர்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன்.
3.15- இரண்டுமணிக்கு ஊரடங்கு உத்தரவு அமுலிற்கு வந்திருக்கவேண்டும் ஆனால் அந்த பகுதி களியாட்ட நிகழ்வு இடம்பெறும் பகுதி போல காணப்பட்டது. சூறையாடப்பட்ட பொருட்களை மக்கள் கொண்டு சென்றுகொண்டிருந்தார்கள்.
ஆடைகள் முதல் தளபாடங்கள் வரை சூறையாடப்பட்டன.
இராணுவ டிரக் அங்கு வந்தவேளை சூறையாடலில் ஈடுபட்டிருந்தவர்கள் தப்பிச்செல்ல முயலவில்லை.
அவர்களை தடுப்பதற்கு பாதுகாப்பு படையினர் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கமாட்டார்கள் என்ற செய்தி அவர்களிற்கு சொல்லப்பட்டிருக்கவேண்டும்.
4.30 - வரை இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தன.சூறையாடலில் ஈடுபட்டிருந்தவர்கள் மிகவும் ஆறுதலாக அவசரமின்றி தங்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
ஆச்சரியமளிக்கும் விதத்தில் அவர்கள் இன்னமும் எனது வீட்டை தாக்கவில்லை.மஹரகம வாக்காளர் பட்டியலில் நான் என்னை பதிவு செய்யாததே இதற்கு காரணம்;.
நான் ஒரு தமிழன் என யாரோ காடையர்களிற்கு தகவல் வழங்கப்போகின்றார்கள்.
எனது குடும்பத்தவர்கள் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்ததால் நான் மாத்திரம் வீட்டிலிருந்தேன்.
6.15 - அவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருந்தது எனினும் அவர்கள் தொடர்ந்தும் சூறையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
பெடெஸ்டல் மின்விசிறியொன்றை யுவதியொருவர் கொண்டு செல்வதை பார்த்ததும் எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.
இன்னுமொரு குழுவினர் 14 முதல் 18 வயதிற்கு உட்பட்ட யுவதிகள் பல பொதிகளை கொண்டுசென்றுகொண்டிருந்தனர்.உடைகளாகயிருக்கவேண்டும்.
7மணி இன்னமும் இருள் விலகவில்லை எனது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
எனக்கு பெரும் அச்சமேற்பட்டதுமரணம் எனது கதவுகளை தட்டுவது போன்ற உணர்வேற்பட்டது.துணிச்சலை வரவழைத்துக்கொண்டு எனது முன்பக்க கதவை திறந்தேன்எனக்கு பெரும் நிம்மதி அது எனது அயல்வீட்டவரான கத்தோலிக்க சிங்களவர்.
அவர் சத்தம்போடவேண்டாம் என என்னை எச்சரித்த பின்னர்உள்ளே வந்தார்.வெளியே நிலைமை மிகவும் ஆபத்தானதாக காணப்படுவதாக தெரிவித்த அவர் பாதுகாப்பிற்காக என்னை அகதிமுகாமிற்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.நான் அதற்கு இணங்கி அவரை அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டேன்.என்னை தயாராகுமாறு கேட்டுக்கொண்ட அவர் உடனடியாக அங்கிருந்து சென்றார்.
7.10
நான் சில ஆடைகள் சில உணவுகளை எடுத்துவைத்துக்கொண்டேன்சில போத்தல்களில் தண்ணீரை சேகரித்துக்கொண்ட நான் சில காகிதங்கள் சில பேனாக்களையும் எடுத்துக்கொண்டேன்.நான் எனது அயலவர் வரும்வரை பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன்.
7.30- மீண்டும் எனது வீட்டிற்கு வந்த அயலவர் என்னை இரத்மலானை முகாமிற்கு பாதுகாப்பாக கொண்டு செல்வதற்காக வெளியே பொலிஸ் ஜீப் காத்திருப்பதாக தெரிவித்தார்.நான் முன்கதவை பூட்டிய பின்னர் எனது வீட்டை பாதுகாப்பாக பாhர்த்துக்கொள்ளுமாறு அவரிடம் மன்றாட்டமாக கேட்டேன்.
அவர் எனது வீட்டை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வதாக தெரிவித்தார் இ ஆனால் சிங்கள அயலவர்கள் எனது வீட்டை காடையர்களிடம் காட்டிக்கொடுக்கலாம் என்ற அச்சத்தையும் வெளியிட்டார்.
அதன் பின்னர் வெளியில் காத்திருந்த பொலிஸ் ஜீப்பினை நோக்கி நான் பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டேன்.
7.50
நான் மேலும் ஆறு தமிழர்களுடன் ஜீப்பில் பயணித்துக்கொண்டிருந்தேன்இஅவர்கள் அனைவரும் நான் வசித்த பகுதியில் வசித்தவர்கள். வீடுகள் எரிவதை என்னால் பார்க்க முடிந்தது.சில நிமிடங்களின் பின்னர் நாங்கள் பெரிய கட்டிடமொன்று தீப்பற்றி எரிவதை பார்த்தோம்.அது இந்தியர் ஒருவருக்கு சொந்தமான ஆடைத்தொழிற்சாலை.
போகும் வழியில் அலறல்களையும் கதறல்களையும் என்னால் கேட்க முடிந்ததுஆனால் இது தற்போது வழமையான விடயமாக மாறியிருந்தது.ஜீப்பில் இருந்த ஏனையவர்கள் அச்சம்தோய்ந்த முகத்துடன் மௌனமாகயிருந்தனர்.
நாஜி ஜேர்மனியின் ஹிட்லர் யூதர்களை காஸ்சேம்பருக்கு அனுப்பியவேளை யூதர்கள் என்ன மனோநிலையில் இருந்திருப்பார்கள் என்பதை என்னால் உணரமுடிந்தது.
யூதர்களை பாதுகாப்பாக அகதிமுகாம்களிற்கு கொண்டு செல்லவேண்டிய வாகனங்களிலேயே அவர்கள் விஷவாயு செலுத்தி கொல்லப்பட்டதை பார்த்தது எனக்கு நினைவிற்கு வந்தது.
8.30- இரத்மலான விமானநிலையத்தில் உள்ள அகதிமுகாமிற்கு நான் வந்து சேர்ந்தேன்.ஜீப்பிலிருந்து இறங்கி சுற்றி நடந்து பார்த்தேன்.விமானங்கள் நிறுத்தப்படும் பகுதியில் சுமார் 5000 பேர் காணப்பட்டனர்.
அகதிமுகாம் இன்றுதான் திறக்கப்பட்டது - இன்றைய தினமே இவ்வளவு பேர் காணப்படுவது வன்முறை எவ்வளவு தீவிரமானது என்பதை உணர்த்தியது.
நான் அனுபவித்த பதற்றம் காரணமாக சோர்வாக உணர்ந்தேன்இசிறிது நீர் அருந்திவிட்டு உறங்கச்சென்றேன்
ஜூலை 26 - 1983
6- மணி - அகதிமுகாமில் இரவு உறக்கத்தின் பின்னர் நான் கண்விழி;த்தேன்.அனேகமானவர்கள் விழித்திருந்தனர்சிறுவர்கள் பசி காரணமாக அழுதவண்ணமிருந்தனர்இநான் அழுதுகொண்டிருந்த சிறுவர்களை நோக்கி சென்று என்னிடமிருந்த உணவுப்பொருட்களை கொடுத்தேன்.
7.15 - முகாமை சுற்றி பார்த்தேன்அகதிகள் பயன்படுத்துவதற்கு மூன்று கழிவறைகளும் ஒரு நீர்க்குழாயும் மாத்திரம் காணப்பட்டது.அனேகமான அகதிகள் விமானங்கள் நிறுத்தப்படும் பகுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.மீதமுள்ளவர்கள் அதற்கு அருகில் உள்ள தார் பகுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
காலை 8.30 மணி. நான் முகாமைச் சுற்றி நடந்து சென்றபோது முகாமில் சுமார் 15 வீரர்களும் 4 போலீசாரும் காவலில் இருப்பதைக் கவனித்தேன். மணிக்கு சுமார் 250 அகதிகள் முகாமுக்குள் குவிந்து கொண்டிருந்தனர். மனைவிகள் இல்லாத ஆண்கள் பெற்றோர் இல்லாத குழந்தைகள் மனைவிகள் தங்கள் கணவர்களைத் தேடுகிறார்கள் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை தேடுகின்றார்கள்
அவர்கள் அனைவரும் மௌனம் கலைந்த அச்சத்துடன் காத்திருந்தனர்
வீதிகளில் காடையர்களால் ஆடைகளையப்பட்ட பெண்கள் இன்னமும் அந்த நிலையிலேயே காணப்பட்டனர்இஅவர்கள் மரணத்திலிருந்து உயிர்பிழைத்தனர் ஆனால் அவமானத்திலிருந்து இல்லை.அவர்கள் வெட்கம் அவமானத்தை உணரும் நிலையில் இருக்கவில்லை.அவர்கள் அனுபவித்த விடயங்களால் அவர்களது மனம் செயலிழந்து காணப்பட்டது.
அவர்கள் மனித இயந்திரங்கள் போல முகாமிற்குள் அலைந்து திரிந்தனர்இஅந்தியர்களின் பார்வை தங்கள் மேல்படுவதை அவர்கள் உணரவில்லை.
ஆனால் அந்த நாள் வரை உண்மையில் பார்த்திராததையோ ஒரு பெரிய காட்சியை அனுபவித்துக்கொண்டிருந்த வக்கிரமான வீரர்களின் முரட்டுத்தனமான கருத்துக்களையோ உணரவில்லை.
காலை 10.00 மணி. அகதிகளுக்கு உணவு வழங்கப்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. பகுதியளவு தீக்காயங்கள் மற்றும் கத்தியால் குத்தப்பட்ட அகதிகளுக்கு சிகிச்சையளிக்க மருந்துகளும் இல்லை மருத்துவர்களும் இல்லை.
சில நேரத்திற்கு முன்பு ஒரு அகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த உடல் இன்னும் அங்கேயே இருந்தது அதை எடுத்துச் செல்ல யாரும் இல்லை.
நன்றி virakesari