காசாவில் பரவும் பட்டினிநிலை குறித்து மனிதாபிமான அமைப்புகள் எச்சரிக்கை

24 ஆடி 2025 வியாழன் 16:04 | பார்வைகள் : 269
காசாவின் பல பகுதிகளிற்கு பட்டினிநிலை பரவ ஆரம்பித்துள்ளது என நூற்றிற்கும் மேற்பட்ட மனிதாபிமான அமைப்புகள் கூட்டாக எச்சரித்துள்ளன.
சேவ் த சில்ரன் எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு உட்பட பல சர்வதேச அமைப்புகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன.
பாலஸ்தீனியர்கள் நம்பிக்கை மற்றும் மனவேதனையின் பிடியில் சிக்குண்டுள்ளனர்இ அவர்கள் யுத்தநிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகளிற்காக காத்திருக்கின்றனர் ஆனால் அவர்கள் காலையில் முன்னரை விட மோசமான நிலையிலேயே கண்விழிக்கின்றனர் என சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் சேவ் த சில்ரன் மேலும் தெரிவித்துள்ளதாவது
இஸ்ரேலிய அரசாங்கத்தின் முற்றுகை தற்போது காசா மக்களை பட்டினியால் வாட்டிவதைக்கும் நிலையில் மனிதாபிமான பணியாளர்களும் பட்டினிகிடப்பவர்களின் பட்டியலில் இணைந்துகொள்கின்றனர்.
தங்கள் குடும்பத்தவர்களிற்கு உணவை பெறுவதற்கான முயற்சியில் சுடப்படும் ஆபத்தை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.
மனிதாபிமான உதவிகள் தற்போது முற்றாக முடிவடைந்துள்ள நிலையில் தங்களின் பணியாளர்கள் வலுவிழப்பதை மனிதாபிமான அமைப்புகள் கண்முன்னால் பார்க்கின்றன.
இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள காசா மனிதாபிமான அமைப்பின் மனிதாபிமான பொருட்களை விநியோகிக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்து இரண்டு மாதங்களின் பின்னர் 109 சர்வதேச அமைப்புகள் பரவும் பட்டினி நிலை குறித்து எச்சரிப்பதுடன் உலக நாடுகளை பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றன.
காசாவிற்கான அனைத்து தரைவழிப்பாதையையும் திறவுங்கள்.
உணவு சுத்தமான நீர் மருந்துகள் எரிபொருள் போன்றவற்றின் விநியோகம் கொள்கை ரீதியிலான ஐநா பொறிமுறை மூலம் மீள இடம்பெறுவதை உறுதி செய்யுங்கள்.
முற்றுகையை முடிவிற்கு கொண்டுவந்து யுத்த நிறுத்தத்திற்கு இணங்குங்கள்.
ஒவ்வொரு நாள் காலையிலும் ஓரே கேள்வி மீண்டும் மீண்டும் காசாவில் எதிரொலிக்கின்றது - இன்று எனக்கு உணவு கிடைக்குமா இ என்பதே அது என்கின்றார்மனிதாபிமான அமைப்பின் பிரதிநிதியொருவர்.
உணவு விநியோகம் இடம்பெறும் பகுதிகளிற்கு அருகில் நாளாந்தம் படுகொலைகள் இடம்பெறுகின்றன.ஜூலை 13ம் திகதி வரை உணவுதேடும்போது 875 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐநா உறுதி செய்துள்ளது.ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதற்கிடையில் இஸ்ரேலியப் படைகள் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் சோர்வடைந்த பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாகஇடம்பெயரச்செய்துள்ளன
ஜூலை 20 அன்று வெளியிடப்பட்ட மிக சமீபத்திய இடம்பெயர்வு உத்தரவுபாலஸ்தீனியர்களை பாலஸ்தீனியர்களை காசாவின் மொத்த நிலப்பரப்பில் 12 வீதத்திற்குள் மட்டுப்படுத்துகின்றது.தற்போதைய சூழ்நிலை காசாவில் செயற்படுவதை சாத்தியமற்றதாக்குகின்றது என உலக உணவு திட்டம் தெரிவிக்கின்றது
போர் தந்திரோபாயமாக பொதுமக்களை பட்டினி போடுவது ஒரு போர்க்குற்றமாகும்
காசாவிற்கு வெளியே களஞ்சியங்களிலும்இகாசாவிற்குள்ளேயும் பெருமளவு உணவுப்பொருட்கள் குடிநீர் போன்றவை பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளனஇ மனிதாபிமான அமைப்புகள் அவற்றை விநியோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது தடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் தாமதங்கள் போன்றவை பெரும் குழப்பம் பட்டினி உயிரிழப்பு போன்றவற்றை உருவாக்கியுள்ளது.
உளவியல் சமூக ஆதரவை வழங்கும் ஒரு உதவி பணியாளர் குழந்தைகள் மீதான பேரழிவு தாக்கத்தைப் பற்றிப் பேசினார்: "குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புவதாகச் சொல்கிறார்கள் ஏனென்றால் குறைந்தபட்சம் சொர்க்கத்திலாவது உணவு இருக்கிறது."
குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களிடையே கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு வரலாறு காணாத அளவில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடுமையான நீர் சார்ந்த வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவி வருகின்றன சந்தைகள் காலியாக உள்ளன கழிவுகள் குவிந்து கிடக்கின்றன பெரியவர்கள் பசி மற்றும் நீரிழப்பால் தெருக்களில் சரிந்து விழுகின்றனர். காசாவில் சராசரியாக ஒரு நாளைக்கு 28 லாரிகள் மட்டுமே விநியோகிக்கப்படுகின்றனஇஇது இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு போதுமானதாக இல்லை அவர்களில் பலர் வாரக்கணக்கில் உதவி இல்லாமல் தவிக்கின்றனர்
ஐ.நா தலைமையிலான மனிதாபிமான அமைப்பு தோல்வியடையவில்லை அது அது செயற்படுவது தடுக்கப்பட்டுள்ளது - தடுக்கப்படுகின்றது