Paristamil Navigation Paristamil advert login

இந்தியர்கள் தொடர்பில் மிரட்டல் விடுக்கும் ட்ரம்ப்

இந்தியர்கள் தொடர்பில் மிரட்டல் விடுக்கும் ட்ரம்ப்

25 ஆடி 2025 வெள்ளி 05:27 | பார்வைகள் : 378


இந்தியர்களை இனி வேலைக்கு எடுக்கக் கூடாது. அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

 

வாஷிங்டனில் நடந்த ஏ.ஐ., மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் பணியாளர் தேர்வு குறித்து அறிவுறுத்தலை வழங்கினார்.

 

அப்போது, அவர் பேசியதாவது; ஆப்பிள், கூகுள் உள்ளிட்ட முன்னணி டெக் நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகளை கட்டுகின்றன.

 

இந்தியாவில் இருந்து ஊழியர்களை நியமிக்கின்றன. அயர்லாந்தில் லாபத்தை சேர்க்கின்றனர். ஆனால் அமெரிக்க தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

 

அமெரிக்கா வழங்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி முன்னணி நிறுவனங்கள் அதிக லாபத்தை ஈட்டுகின்றன. ஆனால், வெளிநாடுகளிலேயே அதிக முதலீட்டை செய்கின்றன. இனி அது நடக்காது.

 

எனவே, அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகளைக் கட்டுவதையும், இந்தியர்களை வேலைக்கு எடுப்பதையும் விட்டு விட்டு, உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்