"அமைதி சாத்தியமே" : செப்டம்பரில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக மக்ரோன் அறிவிப்பு!!!

24 ஆடி 2025 வியாழன் 23:06 | பார்வைகள் : 1132
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பிரான்ஸ் செப்டம்பரில் பாலஸ்தீன அரசை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முக்கிய அறிவிப்பு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அவர் சொற்பொழிவாற்றும் போது அறிவிக்கப்படும்.
காசாவில் உடனடியாக போர் நிறைவடைய வேண்டும், பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும், அமைதி சாத்தியமே என்றும் ஐனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
பிரான்ஸ், மத்திய கிழக்கில் நீடித்த அமைதிக்கான தனது வரலாற்றுப் பணியைத் தொடரும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். பாலஸ்தீன அதிகாரசபையின் தலைவர் மக்மூத் அப்பாஸுக்கு மக்ரரோன் கடிதம் எழுதியுள்ளார், அதில் அமைதியை நோக்கி முன்னேற தனது உறுதியைத் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன்-நோயல் பரோ, இந்த அங்கீகாரம் செப்டம்பரில் உறுதியாக செயல்படுத்தப்படும் என்றும், ஐக்கியநாடுகள் சபை மேடையில் அதனை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.