திசை திருப்பப்பட்ட எயார் பிரான்ஸ் விமானம்!!

25 ஆடி 2025 வெள்ளி 06:00 | பார்வைகள் : 1590
நீஸ் (Nice) விமான நிலையத்தில் தரையிறங்கவேண்டிய எயார் பிரான்சின் விமானம் ஒன்று மார்செய் நகருக்கு வழிமாற்றப்பட்டது.
ஜூலை 24, நேற்று வியாழக்கிழமை பரிசில் இருந்து நீஸ் நகர் நோக்கி புறப்பட்டுச் சென்ற விமானம் ஒன்று, அங்கு தரையிறங்க நான்கு தடவைகள் வரை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சீரற்றகாலநிலை காரணமாக விமான ஓடுதளம் தெளிவாக கிடைக்காததால், விமானம் வழிமாற்றப்பட்டது. AF7306 இலக்க விமானமே இவ்வாறு வழிமாற்றப்பட்டது.
இறுதியாக விமானம் Marseille (Bouches-du-Rhône) நகர விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
நீஸ் விமானநிலையத்தில் வானிலை சீரடைந்ததன் பின்னர் மீண்டும் குறித்த விமானம் மார்செயில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1