துருக்கியில் காட்டுத் தீயில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு

25 ஆடி 2025 வெள்ளி 08:40 | பார்வைகள் : 432
துருக்கி - மத்திய எஸ்கிசெஹிர் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் சிக்குண்டு 10 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு வனத்துறை அமைச்சர் இப்ராஹிம் யுமக்லி தெரிவிக்கையில்,
துரதிஷ்டவசமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 10 தீணயைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மலைப்பகுதியில் தீயணைப்புப் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தபோது, காற்று திசை மாறி வீசியதால், 24 பேர் தீயில் சிக்கிக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.