யாரும் எதிர்பாராத விதமாக காயத்துடனே களமிறங்கிய பண்ட்! எழுந்த கரகோஷம்

25 ஆடி 2025 வெள்ளி 09:40 | பார்வைகள் : 125
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்டில் ரிஷப் பண்ட் மீண்டும் துடுப்பாட்டம் செய்ய களமிறங்கினார்.
ஓல்ட் டிராஃபோர்ட் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் (Rishabh Pant) 37 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது காயமுற்றார்.
வோக்ஸ் வீசி பந்து அவரது காலினை தாக்க, ரிட்டயர்டு ஹர்ட் முறையில் பண்ட் பெவிலியன் திரும்பினார். இதனால் அவர் இந்த டெஸ்ட் போட்டியை தொடர்ந்து ஆட மாட்டார் என்று சந்தேக்கப்பட்டது.
இந்நிலையில் ஷர்துல் தாகூர் 41 ஓட்டங்களில் ஸ்டோக்ஸ் ஓவரில் அவுட் ஆக, அன்ஷுல் கம்போஜ்தான் துடுப்பாட்டம் செய்ய வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் ரிஷப் பண்ட் மீண்டும் களத்திற்கு வந்தார். அவரைக் கண்ட பார்வையாளர்கள் உற்சாகமடைந்த கரகோஷம் எழுப்பினர்.