உலக சாதனை படைத்த கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை

25 ஆடி 2025 வெள்ளி 09:40 | பார்வைகள் : 121
கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக இருந்து வரும் சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு 9,516.8 கோடியை தாண்டியதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு தொடக்கத்தில் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் பங்குகள் உயரத் தொடங்கி தற்போது 120% உயர்வை சந்தித்துள்ளதால், சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பில் இந்த ஏற்றம் என கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனத்தின் பிரமாண்ட வளர்ச்சி சுந்தர் பிச்சையை பில்லியனர் அந்தஸ்துக்கு உயர்த்தி உள்ளது. ப்ளூம் பெர்க் அறிக்கையின் படி சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பும் 1.1 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.9 ஆயிரம் கோடி) டொலராக உயர்ந்து உள்ளது.
இதன் மூலம் மிகப்பெரிய கோடிஸ்வரர் பட்டியில் சுந்தர் பிச்சை இடம் பிடித்து உள்ளார்.
ஒரு நிறுவனத்தின் நிறுவனராக இல்லாத தலைமை நிர்வாக அதிகாரி ஒருவர் பில்லியனர் ஆவது என்பது மிகவும் அரிதான சாதனையாகும்.
இந்த சாதனையை சுந்தர் பிச்சை நிகழ்த்தி தமிழரின் பெருமையை உலகெங்கும் நிலை நாட்டி உள்ளார்.