பிரம்மபுத்திராவின் குறுக்கே பிரம்மாண்டமான அணை கட்டும் சீனா

25 ஆடி 2025 வெள்ளி 09:40 | பார்வைகள் : 921
பிரம்மபுத்திராவின் குறுக்கே பிரம்மாண்டமான அணை கட்டும் நடவடிக்கையை சீனா முன்னெடுத்து வருகிறது.
பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே நீர் மின் திட்டத்துக்காக அணை கட்டுவது தங்கள் இறையாண்மைக்கு உட்பட்ட விஷயம் என சீனா கூறியுள்ளது.
அந்த திட்டம் குறித்து இந்தியா மற்றும் பங்களாதேஷ் கவலை தெரிவித்திருந்த நிலையில்,
இது குறித்து பதிலளித்துள்ள சீன வெளியுறவுத் துறை, புதிய அணை திட்டத்தால் தூய்மையான எரிசக்தியை மேம்படுத்தும் தங்கள் முயற்சி முன்னேற்றம் அடையும் என்று கூறியுள்ளது.
அணை கட்டப்படுவதால், பிரம்மபுத்திரா பாய்ந்தோடும் நாடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், மாறாக அந்த ஆற்றில் ஏற்படும் அளவுக்கு அதிக வெள்ளப்பெருக்கு தடுக்கப்படும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1