Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் இருந்து யாழ் சென்றவர் சடலமாக மீட்பு

கனடாவில் இருந்து யாழ் சென்றவர் சடலமாக மீட்பு

25 ஆடி 2025 வெள்ளி 12:40 | பார்வைகள் : 323


கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்றநபர் ஒருவர் நேற்றைய  தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியை சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் கனடாவில் உள்ளனர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து அவரது மச்சான் முறையானவருடன் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த வேளை நேற்று உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் அவரது வீட்டுக்கு சென்ற மச்சான் அவர் சடலமாக இருப்பதை அவதானித்த நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாராருக்கு தகவல் வழங்கினார்.

அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சாட்சிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்