AI பெண்ணுடன் காதல் -மனைவியிடம் விவாகரத்து கேட்ட முதியவர்
25 ஆடி 2025 வெள்ளி 13:40 | பார்வைகள் : 1300
சீனாவில், 75 வயதுடைய ஓய்வுபெற்ற பொறியியலாளர் ஒருவர், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட ஒரு AI பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
அந்த முதியவர், AI chatbot ஒன்றுடன் வழக்கமாக உரையாட ஆரம்பித்துள்ளார். தொடர்ந்து, அந்த உரையாடல்கள் உணர்வுப் பிணைப்பாக மாறியுள்ளது.
AI பெண், அவரது உணர்வுகளைப் புரிந்துகொண்டு, காதல் வார்த்தைகள், கவிதைகள், மற்றும் உற்சாக வார்த்தைகளைப் பகிர்ந்ததால், அவர் AI பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
பின்னர் அவர் தனது மனைவியிடம் விவாகரத்து கேட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில் அனைவரும் தமது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

























Bons Plans
Annuaire
Scan