தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான மோதல்கள் போராக உருவாகலாம்

25 ஆடி 2025 வெள்ளி 14:40 | பார்வைகள் : 317
தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் இடையில் சர்ச்சைக்குரிய எல்லை பகுதியில் இரண்டாவது நாளாக மோதல்கள் தொடர்ந்துள்ளன.
15 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் ஒருஇலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களைபாதுகாப்பாக வெளியேற்றியுள்ளோம் என இரண்டுநாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
உபோன்ரச்சதானி மாகணாத்திலும்,சுரின் மாகாணத்திலும் மோதல்கள் தொடர்கின்றன என தெரிவித்துள்ள தாய்லாந்து இராணுவம் அந்த பகுதியை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
கம்போடியாவிலிருந்து ரொக்கட்களும் கனரக ஆயுத பிரயோகங்களும் இடம்பெறுவதாக தாய்லாந்து இராணுவம் தெரிவித்துள்ளது.
கந்தராலக் மாவட்டத்தில் தனது படையினர் குண்டுகளை அகற்றிவருகின்றனர் கொல்லப்பட்டவர்களின் உடல்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என தாய்லாந்து இராணுவம் தெரிவித்துள்ளது.
இரண்டு தென்கிழக்காசிய நாடுகளிற்கும் இடையில் முறுகல்நிலை தீவிரமடைந்து வந்த நிலையிலேயே நேற்று மோதல்கள் இடம்பெற்றுள்ளன. எல்லையின் ஆறு பகுதிகளில் தாய்லாந்துகம்போடிய படையினருக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகின்றன.
இருதரப்பும் பரஸ்பரம் மற்றைய தரப்பே மோதலை ஆரம்பித்தாக குற்றம்சாட்டியுள்ளன.தாய்லாந்தின் தலைநகரிலிருந்து 250 மைல் தொலைவில் உள்ள புராதான நகரமான பிரசாத் டா மோன் தொம் என்ற இடத்தில் மோதல்கள் முதலில் ஆரம்பித்துள்ளன.
இதேவேளை கம்போடிய இராணுவத்தின் மீது தாய்லாந்து எவ் 16 தாக்குதலை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.