Paristamil Navigation Paristamil advert login

ஆரோக்கியம் தரும் இயற்கை உணவு

ஆரோக்கியம் தரும் இயற்கை உணவு

12 கார்த்திகை 2021 வெள்ளி 11:58 | பார்வைகள் : 9345


உடலுக்கு உப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு போன்ற சுவைகளும் கட்டாயம் தேவை. இயற்கை உணவுகளை உண்ணும் போது உடலுக்கு தேவையான மற்ற சத்துக்களை இந்த உணவுகளில் இருந்தே உடல் பெற்றுக் கொள்ளும் என்பது தான் உண்மை.

 
மனிதன், சமையல் செய்து சாப்பிட தொடங்கிய நாளில் இருந்தே ஜீரண உறுப்புகளுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்து விட்டான் என்றே சொல்லலாம். உணவு தயாரிப்பதை 6 வகையாக சொல்லலாம். இயற்கை உணவுகள், பதப்படுத்தியவை, அவித்தல், வேக வைத்தல், வறுத்தல், பொரித்தல் ஆகியவை ஆகும். பச்சை காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை கழுவி, நறுக்கி சிறு சிறு துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடுவது அல்லது சுவைக்காக சிறிது உப்பு, மிளகு போன்ற பொருட்களை சேர்த்து 'சாலட்' முறையில் சாப்பிடுவது, கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், தக்காளி, தேங்காய், வெங்காயம் போன்றவற்றை இயற்கை உணவுகள் என சொல்லலாம். இவற்றில் உடலுக்கு தேவையான எல்லா சத்துக்களும் மிகுந்து இருக்கும். இந்த உணவுகளில் நார்ச்சத்து மிகுந்திருக்கும் என்பதால் செரிமானம் விரைவாக நடக்கும். அதனால் மலச்சிக்கல் வராது. உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் மிக அதிகமாக உண்டாகும்.
 
 
உடலுக்கு உப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு போன்ற சுவைகளும் கட்டாயம் தேவை. அவை இயற்கை உணவுகளில் இல்லையே என்பார்கள். இயற்கை உணவுகளை உண்ணும் போது உடலுக்கு தேவையான மற்ற சத்துக்களை இந்த உணவுகளில் இருந்தே உடல் பெற்றுக் கொள்ளும் என்பது தான் உண்மை. இயற்கை உணவுகளை அப்படியே சாப்பிடாமல், சுவைக்காக சில மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.
 
பாலை பதப்படுத்தி வைத்து தயிர், மோர், வெண்ணை என மாற்றுவது, திராட்சை போன்ற பழங்களை காய வைத்து பதப்படுத்தி சாப்பிடுவது, தானியங்களை ஊற வைத்து முளை கட்டிய பிறகு அதனை அப்படியே சாப்பிடுவது. சர்க்கரையுடன் எலுமிச்சை கலந்து தேநீராக குடிப்பது என இயற்கை பொருட்களையே பல்வேறு மாற்றங்கள் செய்து சாப்பிடலாம்.
 
செரிமானத்தில் எவ்வித பிரச்சினையும் இருக்காது என்பதால், உறுப்புகள் எளிதாக செயல்பட்டு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி பெற்று உடலுக்கு நல்ல வலிமை தரும். நெருப்பு மூட்டி செய்யப்படும் சமையலில் மிக சிறப்பான உணவுகள் என்றால், அவித்தல் முறையில் பெறப்படும் உணவுகளே. இயற்கை உணவுகள் அல்லது தானியத்தை அரைத்து, திரித்து அவிக்கப்படும் உணவுகளும் செரிமானத்திற்கு எளிமையானதே. இட்லியும், இந்த வகையில் இடம் பெறுகிறது என்றாலும், அதிகமாக மாவு புளிப்படைவது உடலுக்கு நல்லதல்ல. அவித்தல் முறையில் சத்துக்கள் முழுமையாக வெளியேறி விடுவதில்லை என்பதாலும் உணவு செரிமானத்திற்கு அதிக தொந்தரவு இருக்காது என்பதாலும் இந்த முறை ஏற்றுக்கொள்ள கூடியதே. உப்பு, காரம், வாசனை ஆகியவற்றுக்காக, பல்வேறு வகையான பொருட்களை இயற்கை உணவுகளுடன் சேர்ப்பதால், உணவுகளில் இருக்கும் சக்தி போகின்றன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்