ராணுவம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்: முப்படை தலைமை தளபதி பேச்சு

26 ஆடி 2025 சனி 08:28 | பார்வைகள் : 180
போர்களில் ரன்னர் அப் என்பது கிடையாது. எனவே எந்த ராணுவமாக இருந்தாலும், எப்போதும் உஷாராக தயார் நிலையில் இருக்க வேண்டும்,' என முப்படை தலைமை தளபதி அனில் சவுஹான் கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் அனில் சவுகான் பேசியதாவது: தகவல் வீரர்கள், தொழில்நுட்ப வீரர்கள் மற்றும் அறிவார்ந்த வீரர்கள் ராணுவத்துக்கு தேவை. போர்களில் ரன்னர் அப் என யாரும் கிடையாது. எந்த ராணுவமும் தொடர்ச்சியாக உஷாராக இருப்பதுடன், நடவடிக்கைக்கு தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் தொடர்கிறது. நாம் வாரத்தின் 24 மணி நேரமும், 365 நாட்களும் தயார் நிலையில் இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.