ஏன் ஏனோ

25 ஆடி 2025 வெள்ளி 16:40 | பார்வைகள் : 120
ஏன் ஏனோ அந்த தருணம் மனம் முழுதும் படரும் ஓர் உணர்வு
நீ நீயோ அந்த சாலை தனை கடந்தாய் முகம் முழுதும் உடன் கன்னி சிரிப்பும்
பார் பார்க்கும் ஓர் அழகை இரு விழியில் கொண்டாய் – முழுதும் அதில் கரைந்தேன் முதலில்
ஏன் ஏனோ அந்த தருணம் சில வார்த்தை வர மறுக்கும் மௌனம் அதை இரசிக்கும்
நீ நீயும் சென்ற பிறகும் உந்தன் பிம்பம் அது மறுக்கும் எந்தன் மைவிழி பிரிவை
ஏன் ஏனோ
கடந்தாய் சென்றாய் எந்தன் பாதம் உனை தொடர
அருகிலோ தொலைவிலோ உள்ளத்தினகம் நுழைந்திட்டாய்
ஏன் ஏனோ இதுவரை கண்டதில்லை உனை – உந்தன் விழி கேட்பதும் அது தானோ
புரிவதும் பூரிப்பதும் கண்களுக்கு மட்டும் தானோ
இதழ் உதிர்ப்பது நெடிய மௌனம் தானோ
தயங்கியே தள்ளி சென்றோம் அதன் காரணம் ஏனோ விடை விடுகதையாய் ஆனதேனோ
இனி மீண்டும் சந்திப்போம் உள்ளம் சொல்வதும் அது தானோ