.. விஜய் சேதுபதி கம்பேக் கொடுத்தாரா?

25 ஆடி 2025 வெள்ளி 15:54 | பார்வைகள் : 238
பாண்டிராஜ் இயக்கத்தில் முதன்முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் தலைவன் தலைவி. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். மேலும் ரோஷினி, யோகிபாபு, தீபா, மைனா நந்தினி, செம்பன் வினோத், காளி வெங்கட் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ ராகவ் மேற்கொண்டுள்ளார்.
தலைவன் தலைவி திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஆகாச வீரனாகவும், நித்யா மேனன் பேரரசியாகவும் நடித்துள்ளனர். இப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. சுமார் 1000 திரைகளுக்கு மேல் ரிலீஸ் ஆகி உள்ள இப்படத்தின் முதல் காட்சி இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் படம் குறித்த விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். குடும்பங்கள் கொண்டாடும் படங்களை கொடுப்பதில் கில்லாடியான பாண்டிராஜ், இப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தாரா என்பதை அதன் எக்ஸ் தள விமர்சனங்கள் மூலம் பார்க்கலாம்.
தலைவன் தலைவி திரைப்படத்தின் முதல் பாதி காமெடியாகவும் இரண்டாம் பாதி கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்ததாகவும் உள்ளது. தனது வழக்கமான பேமிலி டிராமா படங்களில் இருந்து விலகி ரொமாண்டிக் காமெடி படமாக இதை கொடுத்திருக்கிறார் பாண்டிராஜ். விஜய் சேதுபதி, நித்யா மேனன், தீபா, செம்பன் வினோத், யோகிபாபு ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்துள்ளனர். காமெடியும், எமோஷனும் நிறைய காட்சிகளில் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. சில காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் பின்னர் பிக் அப் ஆகிவிடுகிறது. சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. எடிட்டர் பிரதீப்பின் படத்தொகுப்பும் அருமை. கிளைமாக்ஸ் வயிறு குலுங்க சிரிக்கும் படி உள்ளது. மொத்தத்தில் அனைத்து தரப்பு ஆடியன்ஸையும் கவரும் வகையில் பக்கா பேமிலி எண்டர்டெயினராக இப்படம் உள்ளது என பதிவிட்டுள்ளார்.