டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா?

25 ஆடி 2025 வெள்ளி 16:54 | பார்வைகள் : 221
லவ் டுடே, டிராகன் படங்களின் வெற்றிக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். அதையடுத்து சுதா கெங்கராவின் உதவியாளர் கீர்த்தீஸ்வரன் இயக்கும் டியூட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனும், சிவகார்த்திகேயனும் பைக்கில் செல்லும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதையடுத்து டியூட் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. என்றாலும் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. மேலும் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்ஐகே படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், தற்போது அவர் நடித்து வரும் டியூட் படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.