சுற்றுலா சென்று வந்த ஒருவருக்கு - காத்திருந்தது 37,000 யூரோக்கள் ’பில்’!

25 ஆடி 2025 வெள்ளி 17:14 | பார்வைகள் : 1829
Maule ( Yvelines ) நகரில் வசிக்கும் ஒருவர் வெளிநாடு ஒன்றுக்கு சுற்றுலா சென்று திரும்பி வந்தபோது அவருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ‘பில்’ ஒன்று காத்திருந்துள்ளது.
வெளிநாட்டில் அவர் தொலைபேசியில் இணையம் பயன்படுத்தியதை அடுத்து, அவருக்கு இந்த கட்டணத்தொகை அறவிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் மே 5 ஆம் திகதி வரை அவர் மொராக்கோ நாட்டில் தனது விடுமுறையைக் கழித்துவிட்டு நாடு திரும்பியுள்ளார். Orange தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சிம் வைத்திருக்கும் அவருக்கு 37,737 யூரோக்கள் கட்டணம் கொண்ட பில் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
63 வயதுடைய குறித்த நபரின் வருடாந்த சம்பளமே அவ்வளவு இல்லை என கவலை தெரிவித்த அவர், “நான் எனது தொலைபேசியை தொடவே இல்லை. என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை!” என தெரிவித்துள்ளார்.
அவர் கட்டணத்தை செலுத்த மறுத்துள்ளதால், Orange நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது.