Paristamil Navigation Paristamil advert login

உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள் பால் குடிக்கலாமா?

உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள் பால் குடிக்கலாமா?

8 கார்த்திகை 2021 திங்கள் 09:18 | பார்வைகள் : 8853


பொதுவாகவே உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு மிக பெரிய சவாலாக இருப்பது அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகள் தான். சீரான முறையில் உடல் எடையை குறைக்க தொடர்ச்சியான உடற்பயிற்சிகள் செய்வதுடன், சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். தினமும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம், வெறும் உடற்பயிற்சியை மட்டும் செய்வதால் உடல் எடை குறையாது என்கின்றனர் உடற்பயிற்சி நிபுணர்கள்.

உடல் எடையை குறைக்கும் போது சில முக்கிய உணவுகளை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும், சில உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும் என்பார்கள். அந்த வகையில், உடல் எடையை குறைப்போர் பால் குடிக்கலாமா? கூடாதா? என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்து வருகிறது. இதை பற்றிய விரிவான விளக்கத்தை இனி தெரிந்து கொள்வோம்.
 பால் உடலுக்கு நல்லதா? பாலில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது நிச்சயம் ஆரோக்கியமான ஒன்று தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இதில் நிறையுற்ற கொழுப்பும், அதிக கலோரிகளும் உள்ளது. இது தான் பலருக்கும் சந்தேகத்தை உண்டாக்குகிறது. 250 மி.லி (1 கப்) பாலில் 5 கிராம் கொழுப்பும், 152 கலோரிகளும் உள்ளது. குறைந்த கலோரி டயட்டை பின்பற்றுவோர் பால் மற்றும் பால் பொருட்கள் எடுத்துக்கொள்வதை பெரும்பாலும் தவிர்த்து வருவார்கள்.
 பால் உடல் எடையை கூட்டுமா? சாதாரண முறையில் உடல் எடையை குறைப்போருக்கு பால் குடிப்பதால் எடைக் கூடாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். மாறாக இது சிறிது எடையை குறைக்க உதவும். பாலில் அதிக புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். மேலும் இதில் ஜிங்க், மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமுள்ளது. இவை அனைத்தும் எலும்புகளை வலுவாக்கவும், எதிர்ப்பு சக்தியை கூட்டவும், உடலின் செயல்திறனை அதிகரிக்கவும் உதவும். எனவே தினமும் குறிப்பிட்ட அளவு பால் குடிப்பதால் உடலுக்கு நன்மை மட்டுமே கிடைக்கும்.
 ஆய்வுகள் கூறுவது என்ன? 2004 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், குறைந்த கலோரி டயட்டை பின்பற்றுவோர் தினமும் 3 முறை பால் அல்லது பால் சார்ந்த உணவு பொருட்களை எடுத்துக்கொண்டதால் உடல் எடையை குறைக்க அதிகம் உதவுகிறது என கண்டறிந்துள்ளனர். எனவே பாலை தவிர்ப்பவர்களை விட பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிட்டு வருவோர் எளிதில் உடல் எடையை குறைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பால் குடிப்பதால் உடல் பருமன், 2-ஆம் வகை சர்க்கரை நோய், உடல் செயல்திறன் பாதிப்பு போன்ற பாதிப்புகளை குறைக்க முடியும்.
 
தினமும் எவ்வளவு பால் குடிக்கலாம்? நீங்கள் உடல் எடையை குறைப்பவர் என்றால் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. தினமும் 250 மி.லி பால் குடிப்பது உங்கள் உடலுக்கு நன்மையையே தரும். இத்துடன் உடலை எப்போதும் புத்துணர்வுடன் வைக்கும். உடற்பயிற்சி செய்து முடித்த பின் நீங்கள் எடுத்துக்கொள்ளும் புரோட்டீன் ஷேக்குடன் பாலை சேர்த்து கொள்ளலாம். பால் குடிப்பதால் ஒவ்வாமை ஏற்படுவோர் சோயா பால் மற்றும் நட் மில்க் போன்றவற்றை அருந்தலாம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்