Paristamil Navigation Paristamil advert login

வியட்நாம் பஸ் விபத்து - குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் பலி

வியட்நாம் பஸ் விபத்து - குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் பலி

26 ஆடி 2025 சனி 13:17 | பார்வைகள் : 199


வியட்நாமில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சிக்கி குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

வியட்நாமில் ஹனோயிலிருந்து டானாங்கிற்கு பஸ் சென்று கொண்டிருந்த போது இந்த பஸ் திடீரென வீதியை விட்டு விலகி போக்குவரத்து அடையாள பலகைகளில் மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 16 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

காயமடைந்த பயணிகள் அனைவரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, வியட்நாமில் வீதி விபத்துகள் அடிக்கடி இடம்பெறும் நிலையில், அந்நாட்டு தேசிய புள்ளிவிபர அலுவலகத்தின் அதிகாரபூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் வீதி விபத்துகளால் 5,024 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்