AI மூலம் நாடுகளை ஒருங்கிணைக்க சீனா முயற்சி

26 ஆடி 2025 சனி 14:17 | பார்வைகள் : 225
செயற்கை நுண்ணறிவில் (AI) உலகளாவிய ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான அமைப்பொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில், சீன பிரதமர் லி கியாங் ( Li Qiang) முன்மொழிவொன்றை அறிவித்துள்ளார்.
வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில், நாடுகளை ஒருங்கிணைக்க அவர் அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவின் ஷங்காய் நகரில் வருடந்தோறும் நடைபெறும் உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
AI க்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்பை உருவாக்க நாடுகளுக்கிடையே ஒருங்கிணைப்பைப் பேணுவதன் அவசியத்தையும் சீன பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் தொழில்நுட்ப போட்டியின் போது, AI ஒரு முக்கிய போர்க்களமாக உருவாகி வருகிறது.
தற்போது, ஒட்டுமொத்த உலகளாவிய AI நிர்வாகமும் வெவ்வேறாகப் பிரிந்து செயற்பட்டு வருகின்றன.
இதேவேளை, சுற்றுலா மற்றும் மேம்பாட்டிற்காக AI ஐ ஏற்றுக்கொள்வதில், இலங்கை, இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் நேபாளமும் இணைந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவின் விரிவாக்கத்தால், உலகம் வேகமாக மாறிவரும் நிலையில், இந்த மாற்றத்தை நேபாளம் ஏற்றுக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.