Paristamil Navigation Paristamil advert login

நடிகர் அஜித்குமாரை வைத்து இயக்குநர் லோகேஷ் படம் இயக்க வாய்ப்புள்ளதா?

நடிகர் அஜித்குமாரை வைத்து இயக்குநர் லோகேஷ் படம் இயக்க வாய்ப்புள்ளதா?

26 ஆடி 2025 சனி 15:36 | பார்வைகள் : 216


நடிகர் அஜித்குமாரை வைத்து படம் இயக்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பதில் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சத்யராஜ், ஆமீர்கான், சௌபின் ஷாயிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தப் படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றன. வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி படம் திரைக்கு வர உள்ள நிலையில், இதற்கான புரமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். அவரிடம் நேர்காணல் ஒன்றில், ‘அஜித்குமாரை வைத்து படம் இயக்குவதற்கு வாயப்புள்ளதா?’ என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “நடிகர் அஜித் குமாரை வைத்து கண்டிப்பாக படம் இயக்குவேன். அதற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கியள்ளன. அவர் கார் ரேஸிலும் நான் என் அடுத்தடுத்த படங்களிலும் பிசியாக இருப்பதால் கொஞ்சம் தள்ளிப்போகிறது. ஆனால், நிச்சயமாக நடக்கும். அஜித்தின் ஆக்ஷன் முகத்தை என்னுடைய படத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை உள்ளது. பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. எல்லாம் அமைந்தவுடன் அந்தப் படம் நிச்சயம் நடக்கும்” என்றார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்