Paristamil Navigation Paristamil advert login

சிக்கன் பிரியாணி...

சிக்கன் பிரியாணி...

26 ஆடி 2025 சனி 15:36 | பார்வைகள் : 116


பொதுமக்கள் விரும்பி சாப்பிட பல பிரியாணி வகைகள் இருந்தாலும், தலப்பாக்கட்டி பிரியாணி தான் பேமஸ். பிரியாணிகளில் ஆம்பூர் பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி, ஹைதராபாத் பாஸ்மதி அரிசி பிரியாணி என பல வகைகளில் இருந்தாலும் சீரகச் சம்பா அரிசியில் செய்யப்படும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணிக்கு நிகராகாது. அந்த வகையில் திண்டுக்கல் ஸ்டைல்ல பாஸ்மதி அரிசி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: சிக்கன் - 2கிலோ பாஸ்மதி அரிசி - 2 கிலோ பட்டை- 20 கிராம் ஏலக்காய் - 7 கிராம் கிராம்பு - 3 கிராம் எண்ணெய் - 300 mlநெய் - கிராம் பெரிய வெங்காயம்- 200 கிராம் ( நறுக்கியது ) பச்சை மிளகாய் - 10 கிராம் புதினா தேவையான அளவு இஞ்சி விழுது - 100 கிராம் பூண்டு விழுது - 180 கிராம் சின்ன வெங்காயம் - 300 கிராம் தக்காளி -250 கிராம்தயிர் - 1 கப் லெமன் ஜூஸ் இரண்டு ஸ்பூன் முந்திரி - 50 கிராம் தக்காளி- 250 கிராம் சின்ன வெங்காயம் - 300 கிராம் உப்பு தேவையான அளவு மிளகாய் தூள் - 10 கிராம்

செய்முறை : முதலில் பிரியாணிக்கு தேவையான மசாலாவை தயார் செய்ய எடுத்து வைத்திருந்த ஏலக்காய், பட்டை, கிராம்பு சேர்த்து பவுடர் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு பிரியாணி செய்வதற்கான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, தேவையான அளவு நெய், நறுக்கி வைத்திருந்த வெங்காயம்,தேவையான புதினா இலை, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதக்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது, சுவைக்காக சின்ன வெங்காயம் அரைத்து வைத்திருந்த விழுது, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

அதன் பிறகு தயிர் ஊற்றிய பிறகு, அரைத்து வைத்திருந்த மசாலா பவுடரை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு உப்பு, 2 ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அதனுடன் தேவையான அளவு முந்திரி சேர்த்து பத்து நிமிடம் நன்றாக மெதுவாக கிளற வேண்டும் அதனுடன் கழுவி வைத்திருந்த சிக்கன் சேர்த்து 50% வேகும் வரை வதக்க வேண்டும்.

சிக்கன் ஒரு 50% வெந்த பிறகு, தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் மூடி போட்டு விட வேண்டும். அதன் பிறகு அரிசி சேர்த்து மெதுவாக கிளறி 25 சதவீதம் வெந்ததும், தம் போட்டு எடுத்தால் சுவையான அட்டகாசமான திண்டுக்கல் ஸ்டைல "பாஸ்மதி அரிசி சிக்கன் பிரியாணி" தயார்.... இந்த பிரியாணி அப்படியே திண்டுக்கல் சீரக சம்பா அரிசியில் செய்வது போலவே இருக்கும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்