$9 மில்லியன் மதிப்புள்ள கருதடை மருந்துகளை பிரான்ஸில் அழிக்க அமெரிக்கா திட்டம்!!

26 ஆடி 2025 சனி 15:57 | பார்வைகள் : 1225
அமெரிக்காவின் USAID திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் உள்ள நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய கருதடை மருந்துகள், தற்போது பிரான்சில் அழிக்கப்பட உள்ளன.
பசுமை கட்சி மற்றும் இடதுசாரி அரசியல்வாதிகள், இவை இன்னும் பயன்படுத்தக்கூடியவையாக (2031 வரை செல்லுபடியாகும்) இருப்பதை சுட்டிக்காட்டி, இந்த மருந்துகளை அழிப்பதை "பெரும் வீணடிப்பும், உயிர்களுக்கு அபாயமும்" உள்ளது என்று கண்டிக்கின்றனர்.
அமெரிக்கா 9 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த மருந்துகளை அழிக்க முனைவதாக கூறப்படுகிறது, ஆனால் பல நலத்துறையினர் இவற்றை பயன்படுத்த தயாராக உள்ளனர். பசுமை கட்சி, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனை, ஐரோப்பிய ஆணையத்துடன் இணைந்து இந்த அழிப்பை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கவும், மருந்துகளை மீள விநியோகிக்க விரும்பும் அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கவும் கோரியுள்ளது.