Paristamil Navigation Paristamil advert login

தெற்கு சிரியாவில் உள்நாட்டு மோதல்! - பரிசில் பேச்சுவாத்தை!!

தெற்கு சிரியாவில் உள்நாட்டு மோதல்! - பரிசில் பேச்சுவாத்தை!!

26 ஆடி 2025 சனி 20:41 | பார்வைகள் : 502


 

சிரியாவின் தெற்கு நகரமான  Suwayda இல் கடந்த ஒருவாரமாக இடம்பெற்று வரும் இரு ஆயுதக்குழுக்களுக்கிடையிலான மோதல் தொடர்பாக இன்று ஜூலை 26, பரிசில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் சிரியாவின் அதிகாரிகளும், இஸ்ரேலிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர். பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் கலந்துகொண்டார். அமெரிக்கா மத்தியஸ்தம் வகித்தது.

சிரியாவின் தெற்கு நகரமான Suwayda இல் பெருமளவில் வசிக்கும் Druze இன மக்கள் மீது Bedouins இனத்தின் ஆயுதக்குழு தாக்குதல் மேற்கொண்டது.

அதை அடுத்து, Druze இன மக்களை காப்பாற்றும் நோக்கில் இஸ்ரேல் களமிறங்கி பதில் தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதல் பூதாகரமாக வெடிக்கும் அபாயம் எழுந்ததால், அதனை பேச்சுவார்த்தை மூலம் நிறுத்த அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டது.

அதன் ஒரு அங்கமாகவே பரிசில் இன்று சனிக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றது.

வர்த்தக‌ விளம்பரங்கள்